MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • SK 17 dropped : எஸ்.கே - விக்கி கூட்டணி டிராப் ஆனது ஏன்?.... அட இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய மேட்டர் இருக்கா!!

SK 17 dropped : எஸ்.கே - விக்கி கூட்டணி டிராப் ஆனது ஏன்?.... அட இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய மேட்டர் இருக்கா!!

நடிகர் சிவகார்த்திகேயன், கடந்த 2019-ம் ஆண்டு விக்னேஷ் சிவனுடன் கூட்டணி அமைத்தார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.  

1 Min read
Author : Ganesh A
Published : Jan 10 2022, 07:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக தொடங்கி, பின்னர் தொகுப்பாளராக உயர்ந்து, தற்போது வெள்ளித்திரையில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

இவர் நடிப்பதோடு மட்டுமின்றி எஸ்.கே.புரடக்‌ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். இதுதவிர பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருகிறார். 

37

தற்போது இவர் கைவசம் டான், அயலான், சிங்கப்பாதை போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமாருடன் ஒரு படம், பிச்சைக்காரன் பட இயக்குனர் சசியுடன் ஒரு படம் என அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். மேலும் இந்த ஆண்டு டோலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார் சிவா.

47

இதில் டான் மற்றும் அயலான் படங்களின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக டான் படம் வருகிற பிப்ரவரி மாதம் 17-ந் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாளன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

57

இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், கடந்த 2019-ம் ஆண்டு விக்னேஷ் சிவனுடன் கூட்டணி அமைத்தார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
 

67

பின்னர் இந்த படம் கைவிடப்பட்டது. இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, இப்படத்தின் பட்ஜெட் மிகவும் அதிகமாம். 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படத்தை பிரம்மாண்டமாக எடுக்க விக்கி திட்டமிட்டாராம். ஆனால் அதற்கு தயாரிப்பாளர் ஓகே சொல்லாததால் இப்படம் கைவிடப்பட்டதாம்.

77

மேலும் இப்படத்திற்கு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்.ஐ.சி) என பெயரிட்டிருந்தார்களாம். இப்படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்ததாகவும், இது டைம் டிராவல் சம்பந்தப்பட்ட பேண்டஸி கதையம்சம் கொண்ட படம் என்பதால் இதற்கு வி.எஃப்.எக்ஸ் பணிகளும் அதிகம் இருந்ததால் பட்ஜெட் எகிறும் எனக் கருதி கைவிட்டுவிட்டார்களாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அனிருத் ரவிச்சந்தர்
சிவகார்த்திகேயன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : வைல்டு கார்டில் பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்... TTF வாசன் உடன் வீட்டுக்குள் எண்ட்ரியாகும் அந்த 2 பேர் யார்?
Recommended image2
Sigma Review by Blue Sattai : சிக்மா படத்தின் மிகப்பெரிய மைனஸ் இதுதான்... விமர்சனத்தில் புட்டு புட்டு வைத்த ப்ளூ சட்டை மாறன்
Recommended image3
Siragadikka Aasai Salary : முத்து vs மீனா... அதிக சம்பளம் யாருக்கு? சிறகடிக்க ஆசை சீரியல் நட்சத்திரங்களின் சம்பள விவரம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved