MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • குடிச்சுட்டு வந்ததால் குக் வித் கோமாளியில் இருந்து பாதியில் துரத்திவிடப்பட்டாரா பிஜிலி ரமேஷ்? காரணம் என்ன ?

குடிச்சுட்டு வந்ததால் குக் வித் கோமாளியில் இருந்து பாதியில் துரத்திவிடப்பட்டாரா பிஜிலி ரமேஷ்? காரணம் என்ன ?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து பிஜிலி ரமேஷ் பாதியில் வெளியேற்றப்பட்ட சம்பவம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Aug 27 2024, 01:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Reason Behind Bijili Ramesh left Cook with Comali

Reason Behind Bijili Ramesh left Cook with Comali

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் ரியாலிட்டி ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்து உள்ளது. தற்போது அதன் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருவது அதில் கோமாளிகளாக பங்கேற்று வருபவர்கள் தான்.

24
Bijili ramesh

Bijili ramesh

முதல் சீசனில் இருந்து பல்வேறு குக்குகள் மாறியதைப் போல் புகழ், குரேஷி, சரத், தங்கதுரை போன்ற ஒருசில கோமாளிகளை தவிர நிறைய பேர் மாறி இருக்கிறார்கள். அதன்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் கோமாளியாக கலந்துகொண்டவர்களில் பிஜிலி ரமேஷும் ஒருவர். இவர் அந்த சீசனில் சில எபிசோடுகளுக்கு பின்னர் பாதியில் வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேறியதற்கான காரணமும் அந்த நேரம் வெளியிடப்படவில்லை.

இதையும் படியுங்கள்... குடியால் சீரழிந்த வாழ்க்கை... நான் செஞ்ச பெரிய தப்பு இதுதான் - இறக்கும் முன் கண்ணீர்மல்க பேசிய பிஜிலி ரமேஷ்

34
Bijili ramesh quits Cook With Comali

Bijili ramesh quits Cook With Comali

இருப்பினும் அவர் குடித்துவிட்டு செட்டுக்கு வந்ததால் தான் அந்நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதுபற்றி பிஜிலி ரமேஷிடமே ஒரு பேட்டியில் ஓப்பனாக கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஆரம்பத்தில் நான் குடித்தேன், அதன்பின்னர் குடியை நிறுத்திவிட்டேன் என கூறி இருக்கிறார். அவர் குடியை கைவிட்டதற்கு முக்கிய காரணம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தானாம். 

44
Bijili ramesh alcohol addiction

Bijili ramesh alcohol addiction

ரஜினியின் தீவிர ரசிகரான பிஜிலி ரமேஷ், ஜெயிலர் பட ஆடியோ லாஞ்சில் குடி எவ்வளவு கொடியது என்பது பற்றி ரஜினிகாந்த் பேசியதை கேட்ட பின்னர் தான் குடியை அடியோடு விட்டுவிட்டதாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அவர் குடியை விட்டாலும், அதனால் அவருக்கு உடலில் ஏற்பட்ட பிரச்சனை இன்று அவரது உயிரையே பறித்திருக்கிறது. அவருக்கு இருந்த குடிப்பழக்கம் தற்போது அவருக்கு எமனாக அமைந்திருக்கிறது. அதனால் 45 வயதிலேயே மரணமடைந்துள்ளார் பிஜிலி.

இதையும் படியுங்கள்...  நயன்தாரா கூட நடிச்சதுக்கும் தான் நிறைய சம்பளம் கொடுத்தாங்க! பிஜிலி ரமேஷ் பகிர்ந்த தகவல்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குக் வித் கோமாளி

Latest Videos
Recommended Stories
Recommended image1
31 கோடியில் 4BHK! நயன்தாரா - விக்னேஷ் சிவனின் கனவு இல்லம் ரெடி! போயஸ் கார்டனில் குடியேறும் தம்பதி?
Recommended image2
அம்மாடியோவ், அழகு பொம்மாயி த்ரிஷாவின் அந்த ஒரு பதிவு! விஜயின் விவாகரத்து வதந்திக்கு மீண்டும் உயிர் கொடுத்த 'Go to People' வாசகம்!
Recommended image3
மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தினவிழா.. ஹிட்லர் உருவாகி வருகிறார்..! விஜய்யை விளாசிய அமீர்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved