நயன்தாரா கூட நடிச்சதுக்கு தான் நிறைய சம்பளம் கொடுத்தாங்க! பிஜிலி ரமேஷ் பகிர்ந்த தகவல்!
விஜய் டிவி பிரபலமும், நடிகருமான பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், இவர் கொடுத்த பழைய பேட்டி ஒன்றில் தனக்கு கொடுத்த சம்பளம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
You Tube Fame Bijili Ramesh
சமீப காலமாக யூ டியூப் மூலம் பிரபலமான பலர் சினிமாவில் நடிக்கவும் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறுகின்றனர். அப்படி வி ஜே சித்துவின் பிராங்க் நிகழ்ச்சி மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தவர் பிஜிலி ரமேஷ்.
Cook with Comali Season 1
Youtube மூலம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அவ்வப்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டி வந்தார். குறிப்பாக 'குக் வித் கோமாளி' சீசன் 1 நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார். ஆனால் பாதியிலேயே இவர் நிகழ்ச்சியில் இருந்து காணாமல் போனார். இதற்கு காரணம் இவருக்கு இருந்த குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட உடல்நல பிரச்சனை என கூறப்பட்டது.
குடிக்கு அடிமையானதால் பறிபோன உயிர்... நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்
Bijili Ramesh Movies
அதேபோல் ஆர்.ஜே பாலாஜி நடித்த எல்கேஜி, ஹிப் ஹாப் ஆதியுடன் நட்பே துணை, ஜெயம் ரவி நடித்த கோமாளி, அமலாபால் நடிப்பில் வெளியான ஆடை, ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள், போன்ற படங்களில் காமெடியனாக மட்டும் இன்றி குணச்சித்திர நடிப்பாராகவும் பார்க்கப்பட்டார்.
Bijili Ramesh About Salary
திரையுலகில் முன்னேறி சென்று கொண்டிருந்த போதுதான், இவரின் குடிப்பழக்கமே இவருக்கு மிகப்பெரிய பிரச்சினையாக மாறியது. ஒரு கட்டத்தில் எழுந்திருக்க கூட முடியாமல் படுத்த படுக்கையாக இருந்த இவர், தன்னுடைய சிகிச்சைக்கு கூட பணம் இல்லை என வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்கள் கண்களை கலங்க செய்தன. இதைத் தொடர்ந்து பிஜிலி ரமேஷுக்கு விஜய் டிவி தரப்பை சேர்ந்த சிலர் உதவியதாக கூறப்பட்டது.
ரஜினிகாந்த், கமல், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் சாயலில் உள்ள சீரியல் ஹீரோஸ்!
Bijili Ramesh Death
உடல்நலம் முடியாமல் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றுவந்த இவர், இன்று அதிகாலை காலமானார். இவருடைய மரணம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று மாலை 5 மணி அளவில் இவருடைய இறுதிச் சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nayanthara Movie
பிஜிலி ரமேஷின் மரணத்தை தொடர்ந்து இவரது பழைய பேட்டிகள் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது. அதாவது இவர் கொடுத்த பேட்டி ஒன்றில், தற்போது தன்னுடைய சம்பளம் குறித்து ஓப்பனாக பேசியுள்ளனர் பிஜிலி ரமேஷ். இவர் அதிகபட்சமாக 'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவோடு நடித்ததற்காக தான் ஒரு நாளைக்கு மட்டும் 20 ஆயிரம் ரூபாய் வாங்கினாராம். ஐந்து நாட்கள் மட்டுமே இதன் படப்பிடிப்பு நடந்ததாகவும் இதனால் 1லட்சம் ரூபாய் கிடைத்ததாகவும் கூறினார்.
மனோரமாவுடன் மோதல்; தடை போட்ட ரஜினிகாந்த்! காரணம் யார்? ரமேஷ் கண்ணா உடைத்த ரகசியம்!
Bijili Ramesh about Kolamavu Kokila
இதை தொடர்ந்து நடிக்கும் படங்களில் யாரும் தான் கேட்கும் சம்பளத்தை கொடுப்பதில்லை. எனவே அவர்கள் கொடுப்பதை நான் வாங்கிக் கொள்வேன் என பேசி உள்ளார். திரையுலகம் மூலம் எனக்கு தேவையான பணத்தை நான் சம்பாதிக்கவில்லை என்றாலும், சிறுவர்கள் முதல் பெரியவர்களின் அன்பையும், அவர்களின் சிரிப்பையும் சம்பாதித்துளேன் இதுவே தனக்கு போதும் என நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தார். சென்னை எம்ஜிஆர் நகரில் 5000 வாடையில் ஒரு வீட்டில் தற்போது பிஜிலி ரமேஷ் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.