- Home
- Cinema
- Diwali Celebration: ராஷ்மிகா மந்தனா, ராஷி கண்ணா ஆகிய 5 இளம் நடிகைகளின் அசரவைக்கும் தீபாவளி ஸ்பெஷல் போட்டோஸ்!
Diwali Celebration: ராஷ்மிகா மந்தனா, ராஷி கண்ணா ஆகிய 5 இளம் நடிகைகளின் அசரவைக்கும் தீபாவளி ஸ்பெஷல் போட்டோஸ்!
தமிழ் சினிமாவை கலக்கி வரும் 5 தமிழ் நடிகைகள் தீபாவளி ஸ்பெஷலாக வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்புகள் இதோ...

தீபாவளி தினம் என்றாலே அனைவருக்கும் ரொம்ப ஸ்பெஷல் தான், அதிலும் பிரபலங்கள் என்றால் சொல்லவே வேண்டாம், தங்களுடைய ரசிகர்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக புகைப்படங்கள் வெளியிட அவர்கள் தவறுவது இல்லை.
அந்த வகையில் தீபாவளியை கூடுதல் ஸ்பெஷல் ஆக்கும் விதமாக பல நடிகைகள் புகைப்படங்கள் வெளியிட்டு தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது மட்டும் இன்றி ரசிகர்களுக்கும் வாழ்த்து கூறியுள்ளனர். நடிகை ராஷி கண்ணா, செம்ம ஹாட்டான சிவப்பு நிற உடையில் கொடுத்துள்ள அழிகிய போஸ் இதோ...
'படைவீரன்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி, 'பிகில்', படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அம்ரிதா அய்யரும் கையில் மத்தாப்பூவுடன் போஸ் கொடுத்து இந்த தீபாவளியை கொண்டாடியுள்ளார்.
சிவப்பு நிற ஸ்லீவ் லெஸ் லெஹங்கா அணிந்து, பூரித்த புன்னகையுடன் இருக்கிறார் அம்ரிதா. இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான 'லிப்ட்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தற்போது இரண்டு தெலுங்கு திரைப்படம் மற்றும் ஒரு கன்னட திரைப்படம் இவரது கை வசம் உள்ளது.
சிம்பிள் லுக்கில் துளியும் மேக்அப் இன்றி, செம்ம கேசுவல் போஸ் கொடுத்து இந்த தீபாவளியை சிறப்பித்துள்ளார், நேஷனல் கிரஷ் ராஷ்மிகா.
இவரது இந்த தீபாவளி ஸ்பெஷல் போஸை பார்த்து ரசிகர்கள், நீங்கள் என்ன செய்தாலும் அழகு, எப்படி போஸ் கொடுத்தாலும் அழகு என கவிதைகள் மூலம் வேற லெவலுக்கு வர்ணித்து வருகிறார்கள்.
வாவ்... தீபாவளிக்காக பிங்க் நிற உடையில் பளீச் போஸ் கொடுத்த நடிகை இந்துஜா. இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
'பிகில்' படத்தை தொடர்ந்து, மூக்குத்தி அம்மன் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்த இந்துஜாவின் கை வசம் தற்போது 'காக்கி' என்கிற படம் மட்டுமே உள்ளது குறிபிடித்தக்கது.
பார்த்தாலே பற்றிக்கொள்ளும் அளவிற்கு தன்னுடைய இடையழகை மொத்தமாக காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார் நடிகை நந்திதா.
மஞ்சள் நிற புடவையில், தாராள கவர்ச்சியில் ரசிகர்களை பார்த்து கண்ணடித்து படி போஸ் கொடுத்துள்ளார் நந்திதா. இதை பார்த்து ரசிகர்கள் பலர் நாளுக்கு நாள் இவரது கவர்ச்சி கூடி கொண்டே செல்வதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.