கோவாவில் புதிய வீடு வாங்கிய ராஷ்மிகா..! அவரே வெளியிட்ட நீச்சல் குளத்தின் புகைப்படம்..!!
நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) , கோவாவில் புதிய வீடு ஒன்று வாங்கியுள்ள நிலையில், இயற்க்கை சூழல் நிறைந்த இடத்தில் அமைந்துள்ள அந்த வீட்டின் நீச்சல் குளத்தின் (swimming pool) புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருவதோடு, புது வீடு வாங்கியுள்ள ராஷ்மிகாவுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
குறுகிய நாட்களிலேயே தன்னுடைய அழகாலும், அசத்தலான நடிப்பாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்த ராஷ்மிகா. கீதா கோவிந்தம் என்கிற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மட்டும் இல்லாது தமிழ் ரசிகர்கள் மனதையும் கவர்ந்தவர் ராஷ்மிகா. இவர் நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சுல்தான்' படத்தின் மூலம் தமிழிலும் நாகையாக அறிமுகமானார்.
ஏற்கனவே, கன்னடம், தெலுங்கு, தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ள நிலையில், பாலிவுட் திரையுலகிலும் நடிகர் அமிதா பச்சனுக்கு மகளாக நடித்து வருகிறார்.
மிகக்குறுகிய காலத்தில் தன்னுடைய திறமையான நடிப்பு, மற்றும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்து, வளர்ந்து கொண்டே செல்லும் ராஷ்மிகா எப்போதுமே சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.
கை நிறைய முன்னணி நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்கள் வைத்துள்ள இவர், தன்னுடைய சம்பளத்தையும் உயர்த்தி விட்டார். எங்கு சென்றாலும் ஹோட்டலில் தங்குவதை தவிர்க்க புதிய வீடு வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் ஒரு புதிய வீட்டை வாங்கிய ராஷ்மிகா மந்தனா, சில மாதங்களுக்கு முன்பு கூட மும்பையிலும் வீடு ஒன்றை வாங்கினார்.
இதை தொடர்ந்து கோவாவில் தற்போது அம்மணி புதிய வீட்டை வாங்கியுள்ளார். நீச்சல் குளத்தோடு கூடிய இந்த வீட்டின் நீச்சல் குளம் மற்றும் பக்கத்தில் இருக்கும் புத்தர் சிலையின் புகைப்படத்தைப் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.