MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கல்யாணமான ஒரே மாசத்துல பிரிஞ்சிட்டோம் - புது குண்டை தூக்கிபோட்ட ரன்யா ராவ் கணவர்

கல்யாணமான ஒரே மாசத்துல பிரிஞ்சிட்டோம் - புது குண்டை தூக்கிபோட்ட ரன்யா ராவ் கணவர்

நடிகை ரன்யா ராவின் கணவர் ஜதின் ஹுக்கேரி, தாங்கள் இருவரும் திருமணமான ஒரே மாதத்தில் பிரிந்துவிட்டதாக நீதிமன்றத்தில் கூறி இருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 18 2025, 11:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Actress Ranya Rao's husband Jatin and I separated within a month of our marriage : நடிகை ரன்யா ராவ் தங்கக்கடத்தல் வழக்கு தான் தற்போது இந்தியா முழுவதும் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. துபாயிலிருந்து 14.8 கிலோ தங்கத்துடன் பெங்களூரு விமான நிலையம் வந்த நடிகை ரன்யா ராவை மடக்கிப் பிடித்து மார்ச் 3ந் தேதி கைது செய்தனர். இதையடுத்து அவரின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது, ரூ.2.67 கோடி ரொக்கப் பணமும், ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. ரன்யா ராவை விசாரித்த போது, அவர் சர்வதேச தங்கக் கடத்தல் ஈடுபட்டதை போலீசார் கண்டறிந்தனர்.

24
Ranya Rao Gold Case

Ranya Rao Gold Case

இந்த வழக்கில் தான் கைது செய்யப்படுவதை தடுக்க ரன்யா ராவின் கணவர் ஜதின் ஹுக்கேரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், தன்னை கைது செய்வதை தடுக்கவும், தன்மீது எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்வதை தடை செய்யவும் கோரியிருந்தார். ரன்யா ராவும் ஜதின் ஹுக்கேரியும் கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், அந்த திருமணம் ஒரு மாதம் மட்டுமே நீடித்துள்ளது, 2023 டிசம்பர் மாதத்தில் அவர்கள் பிரிந்துவிட்டனர் ஜதின் ஹுக்கேரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... நான் தங்கம் கடத்தவில்லை; அந்தர் பல்டி அடித்த நடிகை ரன்யா ராவ்!

34
Ranya Rao

Ranya Rao

இதனை விசாரித்த நீதிமன்றம், ஜதின் ஹுக்கேரி மீது மார்ச் 24 வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என தீர்ப்பு வழங்கியது. கர்நாடக மாநில அரசு, இந்த வழக்கின் சிறப்பு விசாரணைக்கான குழுவை அமைத்து, டிஜிபி ராமசந்திர ராவை விசாரித்துள்ளது. ரன்யா ராவின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தங்கக் கடத்தலில் தொடர்பு உள்ளதா என்பதை கண்டறியவே இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்த விசாரணை அறிக்கை இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

44
Ranya Rao Case

Ranya Rao Case

ரன்யா ராவிடம் விசாரணை மேற்கொண்டதில் அவருக்கு சர்​வ​தேச தங்க கடத்​தல் கும்​பலுடனும், பெங்​களூரு​வில் உள்ள முக்​கிய புள்​ளி​களு​டனும் தொடர்பு இருப்​பது தெரிய​வந்​துள்ளது. இதையடுத்து பெங்​களூருவில் உள்ள ஸ்டார் ஓட்டல் உரிமை​யாளரான தருண் ராஜ் இந்த தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ மற்​றும் அம‌லாக்​கத்​ துறையினரும் ரன்யா ராவ் மீது வழக்​குப் ​ப​திவு செய்​து, விசா​ரணை மேற்கொண்டு வரு​கின்​ற‌னர்.

இதையும் படியுங்கள்... Ranya Rao: தங்கம் கடத்தலுக்கு அரசு வாகனத்தை ரன்யா பயன்படுத்தினாரா? சிறை அதிகாரிக்கு எழுதிய கடிதம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரன்யா ராவ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
31 கோடியில் 4BHK! நயன்தாரா - விக்னேஷ் சிவனின் கனவு இல்லம் ரெடி! போயஸ் கார்டனில் குடியேறும் தம்பதி?
Recommended image2
அம்மாடியோவ், அழகு பொம்மாயி த்ரிஷாவின் அந்த ஒரு பதிவு! விஜயின் விவாகரத்து வதந்திக்கு மீண்டும் உயிர் கொடுத்த 'Go to People' வாசகம்!
Recommended image3
மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தினவிழா.. ஹிட்லர் உருவாகி வருகிறார்..! விஜய்யை விளாசிய அமீர்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved