- Home
- Cinema
- ஜாய் விவாகரத்துக்கு காரணமே ரங்கராஜ் தான்! நிர்கதியாய் நிற்கும் முதல் மகன் - நடிகை ஆதங்கம்!
ஜாய் விவாகரத்துக்கு காரணமே ரங்கராஜ் தான்! நிர்கதியாய் நிற்கும் முதல் மகன் - நடிகை ஆதங்கம்!
Rangaraj Behind joy crizildaa Divorce: ஜாய் கிரிசில்டா தன்னுடைய விவாகரத்துக்கு முக்கிய காரணம் ரங்கராஜ் தான் என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய நிலையில், பிரபல நடிகை இதுகுறித்து ஆதங்கமாக பேசியுள்ளார்.

சர்ச்சையில் சிக்கும் பிரபலங்கள்:
பிரபலங்கள் சர்ச்சையில் சிக்குவது புதிய விஷயம் இல்லை என்றாலும், பிரபலங்கள் பற்றிய தகவலைகளை தெரிந்து கொள்வதில் பல ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர், நடிகர் ரவி மோகனின் விவாகரத்து மற்றும் அவரின் புதிய பெண் தோழி கெனிஷா பற்றிய விஷயம் சமூக வலைத்தளத்தையே கொந்தளிக்க செய்தது. இந்த விஷயம் ஓய்ந்த நிலையில்... தற்போது ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா பற்றிய விஷயம் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
ரங்கராஜ் சொன்ன பொய்:
ஜாய் கிரிசில்டாவை, மாதம்பட்டி திருமணம் செய்து கொண்டது உண்மை தான் என்றாலும் அது மிரட்டலின் பெயரில் நடந்தது என பச்சையாக பொய் சொன்னார். இதற்க்கு ஏற்கனவே ஜாய் சில ஆதங்களை வெளியிட்டாலும்... நெட்டிசன்களும் ஜாய் கிரிசில்டா மற்றும் ரங்கராஜ் நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு, இதெல்லாம் மிரட்டல் போல் தெரியவில்லை என பதிலடி கொடுத்து வந்தனர்.
ஸ்ருதி பிரியா குற்றச்சாட்டு:
அதே போல் ஜாய் - ரங்கராஜ் சர்ச்சை துவங்கி 7 மாதங்களுக்கு மேல் ஆனாலும், வாய் திறக்காமல் இருந்து வந்த ரங்கராஜன் முதல் மனைவி ஸ்ருதி, தன்னுடைய கணவரிடம் ஜாய் எதிர்பார்ப்பது பணம் மட்டுமே என்றும், தங்களின் திருமண வாழ்க்கையை சீரழிக்க முயல்வதாகவும் கூறி இருந்தார். இதற்கும் ஜாய் வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னுடைய விளக்கத்தை கூறினார்.
விவாகரத்துக்கு காரணம் ரங்கராஜ்:
இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், ஜாய் தன்னுடைய முதல் கணவர் ஜெ ஜெ ஃபெட்ரிக்கை விவாகரத்து செய்ய காரணம் ரங்கராஜ் தான் என கூறி அதிர வைத்துள்ளார். தங்களுக்குள் இருந்த சிறிய கருத்து வேறுபாடே விவாகரத்து வரை கொண்டு செல்ல வைத்தார். உன்னையும், உன் பிள்ளையையும் நான் பார்த்து கொள்கிறேன் என கூறினார் இதன் பிறகே நான் நீதிமன்றத்தை நாடி விவாகரத்து பெற்றேன் என கூறியுள்ளார்.
சார்மிளா ஆதங்கம்:
இந்த நிலையில் முதல் கணவருக்கு பிறந்த ஜாய் கிரிசில்டாவின் மகன் ஜேடன் குறித்து பிரபல நடிகை சார்மிளா பேசியுள்ளார். ஜாய் கிரிசில்டாவின் செயல்களால் அதிகம் பாதிக்கப்பட்டது என்னவோ, முதல் கணவருடைய குழந்தைதான். இப்படி பட்ட ஒரு சர்ச்சையை சந்திக்கும் போது அந்த பையனை நல்ல மனநிலைமையோடு ஜாய் கிரிசில்டா வளர்க்கிறாரா? என தோன்றுகிறது. ஒரு தாயாக அந்த குழந்தைக்கு அவர் துரோகம் செய்துள்ளார். அந்த பையனுக்கு அப்பா பாசம் கிடைக்காமலேயே போய் விட்டது. ரங்கராஜை அந்த குழந்தை இதுவரை அப்பா என்று தான் அழைத்தேன் என்பதை அவரே ஒரு பேட்டியில் கூட கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பிள்ளைகள்:
இப்போது ரங்கராஜ் மூலம் ஜாய்க்கு மற்றொரு குழந்தை பிறந்துள்ளது. ரங்கராஜ் ஒருவேளை ஜாய்யை ஏற்றுக்கொண்டாலும், முதல் கணவருக்கு பிறந்த மகனை ரங்கராஜ் மதிப்பாரா? இன்னொரு பக்கம் ஸ்ருதி-ரங்கராஜுக்கு பிறந்த மகன்களும் நிம்மதியாக இருப்பார்களா. பெரியவர்கள் செய்யும் தவறுகளால் பாவம் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்க படுகிறார்கள் என கூறி இருக்கிறார் சார்மிளா.