- Home
- Cinema
- சிம்பிளாக நடந்து முடிந்தது ஆலியாபட் - ரன்பீர் கபூர் திருமணம்! இணையத்தை கலக்கும் காதல் ஜோடியின் கல்யாண போட்டோஸ்
சிம்பிளாக நடந்து முடிந்தது ஆலியாபட் - ரன்பீர் கபூர் திருமணம்! இணையத்தை கலக்கும் காதல் ஜோடியின் கல்யாண போட்டோஸ்
Ranbir Alia wedding pics : திருமணத்தை எளிமையாக நடத்தினாலும், விரைவில் வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடி முடிவு செய்துள்ளதாம்.

பாலிவுட்டில் முன்னணி சினிமா நட்சத்திரங்களாக வலம் வரும் ஆலியா பட்டும், நடிகர் ரன்பீர் கபூரும் பிரம்மாஸ்திரா படத்தில் நடித்த போது காதல் வயப்பட்டனர். இவர்களது திருமணம் நேற்று நடைபெற்றது.
மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள நடிகை ஆலியா பட்டின் அடுக்குமாடி குடியிருப்பில் எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
திருமண புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிந்துள்ள ஆலியா பட், 5 ஆண்டுகளாக தாங்கள் ஒன்றாகவே நேரத்தை செலவழித்த பால்கனியிலேயே தங்களது திருமணம் நடைபெற்றதாக நெகிழ்ச்சியுடன் கூறி உள்ளார்.
5 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ள இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ரன்பீர் கபூர் - ஆலியா பட் திருமணத்தில் கரீனா கபூர், கரிஷ்மா கபூர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும், தொழிலதிபர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமணத்தை எளிமையாக நடத்தினாலும், விரைவில் வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடி முடிவு செய்துள்ளதாம்.
அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை உள்ள உச்ச நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... கியூட் நயன்தாரா... ஹாட் சமந்தாவுடன் குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி - வைரலாகும் டூடூடூ பாடல் கிளிம்ப்ஸ்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.