MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இவங்கெல்லாம் கொஞ்சம் ரக்கர்ட் ஆன ஆளு... டாப் ஹீரோக்களே மிரண்டு போகும் அளவுக்கு வில்லியாக மாஸ் காட்டிய நடிகைகள்

இவங்கெல்லாம் கொஞ்சம் ரக்கர்ட் ஆன ஆளு... டாப் ஹீரோக்களே மிரண்டு போகும் அளவுக்கு வில்லியாக மாஸ் காட்டிய நடிகைகள்

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு எதிராக வில்லி கேரக்டரில் நடித்து மிரள வைத்த டாப் நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 28 2023, 02:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்கள் என முத்திரை குத்தப்பட்டு பல்வேறு படங்களில் அவர்கள் தங்களின் டெரரான நடிப்பால் அசத்தி இருந்தாலும், நிலையான வில்லி நடிகை என சொல்லும் அளவுக்கு பெரியளவில் யாரும் இல்லை. இருந்தாலும், முன்னணி நடிகைகள் சிலர் வில்லி கேரக்டரில் நடித்து அசத்தி இருக்கிறார்கள். அப்படி நெகடிவ் ரோலில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன்

நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது படையப்பா தான். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய அப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லியாக நடித்து மிரட்டி இருப்பார் ரம்யா கிருஷ்ணன். அவர் நடித்த நீலாம்பரி என்கிற கதாபாத்திரத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அப்படம் வெற்றியடைய அவரின் கதாபாத்திரமும் முக்கிய காரணமாக அமைந்தது.

39
ரீமா சென்

ரீமா சென்

மின்னலே படத்தில் ரொமாண்டிக் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ரீமா சென்-ஐ யாரும் எதிர்பார்க்காத விதமாக வில்லியாக நடிக்க வைத்து சர்ப்ரைஸ் கொடுத்தது சிம்பு. அவர் முதன்முதலில் இயக்கிய வல்லவன் படத்தில் சிம்புவின் பள்ளிப்பருவ காதலியாக கீதா கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரீமா சென், பின்னர் வில்லியாக மாறி நடிப்பில் அதகளம் செய்திருப்பார். 

49
ஜோதிகா

ஜோதிகா

துறுதுறு ஹீரோயினாக தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருந்த ஜோதிகாவை வில்லியாக மாற்றியது இயக்குனர் கவுதம் மேனன் தான்.  அவர் இயக்கத்தில் வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் முதன்முதலில் வில்லியாக நடித்திருந்தார். ஆனால் அவரின் இந்த வில்லி கதபாத்திரம் அப்படத்திற்கு மைனஸ் ஆக அமைந்தது.

59
திரிஷா

திரிஷா

தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் நடிகை திரிஷா வில்லியாக நடித்திருந்தார். ஆரம்பத்தில் தனுஷை காதலித்து வரும் அவர் கடைசியில் வில்லியாக மாறுவது தான் படத்தின் திருப்புமுனையாக இருந்தது. அரசியல் வாதியாக நடித்திருந்த திரிஷா, தான் வெற்றிபெற தடையாக இருந்த தனது காதலன் தனுஷை கொலை செய்து வில்லத்தனமான நடிப்பில் மிரள வைத்திருப்பார்.

இதையும் படியுங்கள்... ஒரு பாட்டுக்கு சம்பளம் 3 கோடி? கிறுகிறுக்கவைக்கும் "Singers-ன் சம்பளம்" - அவர் தான் டாப்புனு சொல்றாங்க!

69
ஸ்ரேயா ரெட்டி

ஸ்ரேயா ரெட்டி

தருண் கோபி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான திமிரு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதற்கு அப்படத்தில் வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டி தான் முக்கிய காரணம் என சொல்லலாம். கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஸ்ரேயா ரெட்டி விஷாலை கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லி டார்ச்சர் செய்யும் சீனில் வேறலெவலில் நடித்திருப்பார். இப்படத்துக்கு பின் அவருக்கு அந்த மாதிரி மாஸான வேடங்கள் எதுவும் அமையவில்லை.

79
மும்தாஜ்

மும்தாஜ்

நடிகை மும்தாஜ் என்றாலே கவர்ச்சி வேடங்கள் தான் இருந்த காலகட்டத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ராஜாதி ராஜா திரைப்படத்தில் வில்லியாக நடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி இருந்தார் மும்தாஜ். இருப்பினும் இப்படம் வர்த்தக ரீதியாக தோல்வியை தழுவியது.

89
மனிஷா கொய்ராலா

மனிஷா கொய்ராலா

சுராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாப்பிள்ளை. இப்படம் மூலம் தான் நடிகை ஹன்சிகா ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தில் நடிகை ஹன்சிகாவின் அம்மாவாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். அதுவரை தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த அவர், முதன்முறையாக அப்படத்தில் வில்லி வேடம் ஏற்று நடித்திருந்தார்.

99
வரலட்சுமி

வரலட்சுமி

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கு ஹீரோயினாக நடித்த படங்கள் பெரியளவில் கைகொடுக்காததால், வில்லியாக களமிறங்கினார். அந்த வகையில் இவர் விஷாலுக்கு வில்லியாக நடித்த சண்டக்கோழி 2 மற்றும் விஜய்க்கு வில்லியாக நடித்த சர்க்கார் ஆகிய இரண்டு படங்களும் அவரது கெரியருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

இதையும் படியுங்கள்... மாமன்னன்.. இன்டெர்வல் ப்ளாக்கில் திரையரங்கம் அதிரும் - தனுஷ் கொடுத்த அட்டகாச அப்டேட்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரம்யா கிருஷ்ணன்
சிம்ரன்
தமிழ் நடிகைகள்
திரிஷா
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved