சிவாஜிக்கு பின் தளபதி தான் – விஜயின் அபூர்வ திறமையை புகழ்ந்த ரமேஷ் கண்ணா!
Ramesh Khanna Praises Vijay After Sivaji has Thalapathy this talent: தளபதி விஜயின் 'ப்ரெண்ட்ஸ்' பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, ரமேஷ் கண்ணா தளபதியின் அபூர்வ திறமை பற்றி பேசியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.

மீண்டும் திரைக்கு வரும் ப்ரண்ட்ஸ்:
தமிழ்த் திரைப்பட உலகில் இன்று பேசுபொருளாக மாறி இருக்கும் விஷயம் என்றால் அது, நடிகர் விஜய் தொடர்பான இரண்டு முக்கிய தகவல்கள் தான். ஒன்று... அவர் அரசியலுக்கும் முழுமையாக நுழைந்து விட்ட நிலையில், அவரின் இறுதி படம் 2026 பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது; இரண்டாவது... அவரின் கேரியரில் தனித்துவமான முக்கியத்துவம் பெற்ற ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது.
விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்':
விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது அனைவரும் அறிந்ததே. இந்த அறிவிப்பு வந்த முதலே ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதே நேரம் வருடங்கள் கடந்தும் ரசிகர்கள் நினைவில் பெரும் இடம் பெற்றுள்ள ‘ப்ரண்ட்ஸ்’ படம் ரீரிலீஸ் செய்யப்படுவது ரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ப்ரண்ட்ஸ் ரீரிலீஸ்:
நவம்பர் 21ஆம் தேதி ரீரிலீஸ் ஆகும் ‘ப்ரண்ட்ஸ்’ படத்துக்கான சிறப்பு விழா நடந்தது. இதில், விஜயின் பல படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகிய நடிகர் மற்றும் இயக்குனர் ரமேஷ் கண்ணா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசிய போது விஜயின் நடிப்பு திறமையையும், அவரது தொழில் நெறியையும் புகழ்ந்து தள்ளினார்.
ரமேஷ் கண்ணா கூறிய தகவல்:
அதாவது “நான் நடிக்கும் முன், எப்போதும் இயக்குனரிடம் காட்சியைப் பற்றி கேட்டு, என்ன செய்ய வேண்டும் என்று புரிந்துகொண்டு தான் நடிப்பேன். ஆனால் விஜய் ஒருபோதும் அதைப் பற்றி அதிகம் பேசமாட்டார். ஸ்பாட்டுக்கு அமைதியாக வந்து, காட்சியில் அசத்திவிடுவார்” என கூறியுள்ளார்.
சிவாஜியுடன் ஒப்பிட ரமேஷ் கண்ணா:
அதுமட்டுமல்ல, டப்பிங் செய்வது குறித்தும் விரிவாக பேசினார். “ஒரு காட்சிக்காக நான் நான்கு முறை கூட டப்பிங் பேசுவேன். சரியான மாடுலேஷன் கிடைக்க பல தடவை பேச வேண்டி இருக்கும். ஆனால் விஜய்க்கு பெரும்பாலும் ஒரே டேக் போதும். டப்பிங் ஸ்டூடியோவில் அத்தனை தெளிவாகவும், நடித்தது போலவே உணர்ச்சியுடன் பேசும் திறமை அவருக்கு உண்டு. எனக்குத் தெரிந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு” பின்னர் இப்படி டப்பிங்கில் அசத்தும் ஒரே நடிகர் விஜய் மட்டும் தான் என்று ரமேஷ் கண்ணா கூறியுள்ளார்.
ரமேஷ் கண்ணா இதுவரை யாரும் கூறாத இந்த தகவலை கூறி உள்ளத்தை தொடர்ந்து, ரீரிலீஸ் காத்திருக்கும் தளபதி ரசிகர்கள் இந்த தகவலை வைரல் ஆக்கி வருகிறார்கள். ஜனநாயகன் படத்திற்கு பின்னர், தளபதியின் புதிய படங்கள் வராது என்றாலும், அவரின் பழைய ஹிட் படங்களை ரசிகர்கள் வரவேற்ப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.