MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நளினி கூட சேர்ந்து வாழ்வது உண்மையா? சீக்ரெட்டை உடைத்த ராமராஜன்!

நளினி கூட சேர்ந்து வாழ்வது உண்மையா? சீக்ரெட்டை உடைத்த ராமராஜன்!

ராமராஜனும், நளினியும் சேர்ந்து விட்டதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் வட்டமிட்டு வரும் நிலையில், இதுகுறித்து வெளிப்படையாக ராமராஜன் தற்போது பேசியுள்ளார்.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Apr 10 2025, 12:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

Ramarajan, Nalini Reunion for Kids: What is the truth? சினிமாவில் துணை இயக்குனராக இருந்து, பின்னர் கஷ்டப்பட்டு படிப்படியாக முன்னேறி நடிகரானவர் தான்  ராமராஜன். 'மீனாட்சி குங்குமம்' படம் மூலமாக அறிமுகமான ராமராஜன் 'நம்ம ஊரு நல்ல ஊரு' படம் மூலமாக ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இந்தப் படத்திற்கு பின்னர் எங்க ஊரு பாட்டுக்காரன், நேரம் நல்லா இருக்கு, என்னை விட்டு போகாதே, எங்க ஊரு காவல்காரன், செண்பகமே செண்பகமே, வில்லு பாட்டுக்காரன், கரக்காட்டக்காரன் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் கிராமத்து கதைக்களத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

வீட்டை எதிர்த்து திருமணம்:

நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போதே நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வீட்டை எதிர்த்து தான் ராமராஜன் நளினி திருமணம் செய்து கொண்டனர். 

திரும்பவும் அதே நிலைமை வந்துச்சு; தினமும் அழுதேன் - நடிகை நளினியின் சோகமான நாட்கள்!

36

எம்ஜிஆர் தலைமையில் திருமணம்:

பின்னர் இவரின் திருமணம் எம்ஜிஆர் தலைமையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதையடுத்து அருண் என்ற மகனும், அருணா என்ற மகளும் இவர்களுக்கு உள்ளனர். 1987 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் 13 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவரும் 2000 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றனர்.

46

இருவரும் ஒருவருக்கொருவர் தவறாக சொன்னது கிடையாது:

எனினும், நளினி தனது கணவர் ராமராஜனை இன்னமும் காதலித்து வருவதாக தன்னுடைய ஒவ்வொரு பேட்டியிலும் கூறி வருகிறார். இதே போன்று தான் ராமராஜனும் நளினி மீது அன்பும், மரியாதையும் வைத்திருப்பதாக கூறி வருகிறார். அதுமட்டுமின்றி எந்த ஒரு இடத்திலும் இருவரும் யாரையும் ஒருவருக்கொருவர் தவறாக பேசியதோ, எந்த குறையும் சொன்னது கிடையாது.

தினமும் புது புடவை மட்டும் தான் கட்டுவேன்! புடவைகளுக்கு என்றே தனி வீடு; நடிகை நளினி கூறிய தகவல்!

56

துளியும் உண்மை இல்லை:

இந்த நிலையில் தான் ராமராஜன் மற்றும் நளினி இருவரும் மீண்டும் சேர்ந்துவிட்டதாக தகவல் பரவி சமூக வலைத்தளத்தில் பரவிய நிலையில், இதற்கு ராமராஜன் தரப்பில் இருந்து விளக்கம் கொடுத்துள்ளார்.  அதாவது இவர்கள் இருவரும் தங்களின் பிள்ளைகளுக்காக மீண்டும் சேர்த்து வாழ முடிவு செய்ததாக கூறப்பட்ட நிலையில் தான் இந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறுகையில்... "நடக்காத ஒரு விஷயத்தை ஏன் இப்படி பேசுகின்றனர் என்பது எனக்கு தெரியவில்லை. நானும் நளினியும் இணைந்து விட்டோம் என்பதில் துளியும் உண்மை இல்லை. இனிமேல் நடக்கவே நடக்காத ஒரு விஷயம் இப்படி உண்மை போல் பேசுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
 

66

எங்கள் இருவரின் மனதும் வருத்தமடைகிறது:

நாங்கள் பிரிந்து 25 வருடங்கள் கடந்துவிட்டது. தனியாக வாழ பழகி விட்டேன். இதுபோன்ற வதந்திகளால் எங்கள் இருவரின் மனதும் வருத்தமடைகிறது. எங்களுடைய பிள்ளைகளும் இந்த வதந்தியால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே இது போன்ற வதந்தியை கிளப்பும் நபர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதர்வா முதல் ராமராஜன் வரை! டிசம்பர் 20 ஓடிடி-யை ஆக்கிரமித்த நடிகர்களின் படங்கள்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சினிமா
நடிகை நளினி
ராமராஜன் (நடிகர்)
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved