MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஸ்டைலா... கெத்தாக அமர்ந்து... ஏ.ஆர்.ரகுமான் இயக்கிய படத்தை கண்டுகளித்த ரஜினிகாந்த் - வைரலாகும் போட்டோஸ்

ஸ்டைலா... கெத்தாக அமர்ந்து... ஏ.ஆர்.ரகுமான் இயக்கிய படத்தை கண்டுகளித்த ரஜினிகாந்த் - வைரலாகும் போட்டோஸ்

பாபா பட ரீ-ரிலீஸ் பணிகளுக்காக ஏ.ஆர்.ரகுமானின் ஸ்டூடியோவிற்கு சென்ற ரஜினிகாந்த், அவர் இயக்கிய லே மஸ்க் திரைப்படத்தை கண்டு ரசித்துள்ளார். 

1 Min read
Author : Ganesh A
Published : Dec 01 2022, 08:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தனது இசையால் ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இந்த ஆண்டு இவரது இசையமைப்பில் இரவின் நிழல், கோப்ரா, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் ரிலீசாகின. இந்த அனைத்து படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது மட்டுமின்று பன்முகத்திறமையாளராகவும் விளங்கி வருகிறார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 99 சாங்ஸ் திரைப்படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமாகி இருந்தார். அப்படத்தையும் இவர் தான் தயாரித்து இருந்தார். இதையடுத்து இயக்குனராகவும் அவதாம் எடுத்துள்ளார் இசைப்புயல்.

இதையும் படியுங்கள்... தயாரிப்பாளர் பரிசாக தந்த காரை திருப்பி கொடுத்த ‘லவ் டுடே’ பிரதீப் - அதற்கு பதில் அவர் கேட்டது என்ன தெரியுமா?

34

அந்த வகையில் இவர் இயக்கிய முதல் திரைப்படம் லே மஸ்க் (Le Musk). வெறும் 36 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய இப்படத்தை அண்மையில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட்டு பாராட்டுக்களை பெற்றார். இந்த படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால், இப்படத்தை விர்சுவல் ரியாலிட்டி முறையில் அவர் உருவாக்கி உள்ளார்.

44

இந்நிலையில், லே மஸ்க் திரைப்படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு போட்டுக் காட்டி உள்ளார் ஏ.ஆர்.ரகுமான். சமீபத்தில் பாபா பட ரீ-ரிலீஸ் பணிகளுக்காக ஏ.ஆர்.ரகுமானின் ஸ்டூடியோவிற்கு சென்ற ரஜினிகாந்த், அவர் இயக்கிய லே மஸ்க் படத்தை கண்டு ரசித்துள்ளார். விர்சுவல் ரியாலிட்டி கிளாஸ் அணிந்து சேரில் ஸ்டைலாகவும், கெத்தாகவும் அமர்ந்தபடி ரஜினி அந்த படத்தை பார்த்த போது எடுத்த புகைப்படத்தை ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படியுங்கள்... ஒரு பாடலுக்கு இத்தனை கோடியா? ராம் சரணின் RC 15 படத்திற்காக நியூசிலாந்து சென்று ஷங்கர் செய்த சிறப்பான சம்பவம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஏ. ஆர். ரகுமான்
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved