ரஜினி vs விஜய்... அதிகமாக 100 கோடி ஓப்பனிங் கொடுத்த பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்?
Rajinikanth vs Vijay 100 Crore Openings : தமிழ் சினிமாவில் முதல் நாளே 100 கோடி வசூல் அள்ளிய ஹீரோக்கள் என்றால் அது ரஜினிகாந்த் மற்றும் விஜய் தான். இவர்களில் யார் அதிகபட்சமாக 100 கோடி வசூல் படங்கள் கொடுத்துள்ளனர் என்பதை பார்க்கலாம்.

Rajinikanth vs Vijay 100 Crore Opening Movies
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவருக்கு தற்போது 75 வயது ஆனாலும் இன்றும் சுறுசுறுப்பாக நடித்து வருகிறார். நேற்று ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருவதோடு, விமர்சன ரீதியாகவும், சூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த படக்குழுவுமே செம குஷியில் இருக்கிறார்கள். இந்த நிலையில், ஜெயிலர் 2 படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் தற்போது வெளியாகி உள்ளது.
100 கோடி ஓப்பனிங் பெற்ற ஜெயிலர் 2
ஜெயிலர் 2 திரைப்படம் முதல் நாளே 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருக்கிறது. அப்படத்திற்கு இந்தியாவில் 75 கோடியும், வெளிநாடுகளில் 50 கோடியும் வசூல் கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் முதல் நாளில் அதிக வசூலை வாரிசுருட்டிய படம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது ஜெயிலர் 2. ஜெயிலர் படத்தின் முதல் பாகம் முதல் நாளில் 96 கோடி வசூலித்து ஜஸ்ட் மிஸ்ஸில் 100 கோடி என்கிற மேஜிக் நம்பரை எட்டத் தவறியது. அந்த ஏக்கத்தை ஜெயிலர் 2 நிறைவு செய்துள்ளது. இப்படம் நேற்று மட்டும் ரூ.125 கோடி வசூலித்திருக்கிறது.
ரஜினியின் 100 கோடி ஓப்பனிங் படங்கள் என்னென்ன?
ஜெயிலர் 2-வுக்கு முன்னதாக முதல் நாளில் 100 கோடி வசூல் அள்ளிய இரண்டு படங்களை கொடுத்திருக்கிறார் ரஜினிகாந்த். அதில் ஒன்று எந்திரன் 2.0. இப்படம் கடந்த 2018-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.115 கோடி வசூலித்திருந்தது. இதையடுத்து 7 ஆண்டுகளாக ரஜினி படங்கள் எதுவும் 100 கோடி ஓப்பனிங் பெறாமல் இருந்த நிலையில், கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன கூலி திரைப்படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது. இந்த லிஸ்ட்டில் தற்போது ஜெயிலர் 2-வும் இணைந்துள்ளதால், மொத்தம் மூன்று 100 கோடி ஓப்பனிங் படங்களை ரஜினி கொடுத்துள்ளார்.
விஜய்யின் 100 கோடி ஓப்பனிங் படங்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து தற்போது தமிழ்நாட்டின் முதல்வராக பதவி வகித்து வரும் விஜய், சினிமாவின் உச்சத்தில் இருந்தபோதே மக்கள் பணி செய்வதற்காக சினிமாவை விட்டு விலகிச் சென்றார். இவர் சினிமாவில் நடித்தபோது சில படங்கள் முதல் நாளே 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கின்றன. அதில் முதல் படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த இப்படம் முதல் நாளே ரூ.149 கோடி வசூலித்தது. இதையடுத்து 2024-ம் ஆண்டு விஜய் நடிப்பில் ரிலீஸ் ஆன கோட் திரைப்படம் 126.32 கோடி வசூலித்தது. இதுவரை விஜய் இரண்டு 100 கோடி ஓப்பனிங் படங்களை கொடுத்திருக்கிறார்.
விஜய்யை முந்திய ரஜினி
கடந்த ஆண்டு வரை விஜய், ரஜினி இருவருமே இரண்டு நூறு கோடி ஓப்பனிங் வசூல் படங்களுடன் சமநிலையில் இருந்த நிலையில், இந்த ஆண்டு ரஜினி, விஜய்யை முந்தி இருக்கிறார். ஜெயிலர் 2 திரைப்படம் முதல் நாளே 125 கோடி வசூலித்ததன் மூலம் அவரின் 100 கோடி ஓப்பனிங் வசூல் படங்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் இன்றைக்கும் என்றைக்கும் தான் தான் சூப்பர்ஸ்டார் என்பதை நிரூபித்துள்ளார் ரஜினிகாந்த். சூப்பர்ஸ்டாரின் இந்த மாஸான சாதனையை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

