ரூ.2000 கோடி பாக்ஸ் ஆபிஸ் கொடுக்க கூடிய ரஜினியின் டாப் 5 எவர்கிரீன் மூவிஸ்!
Rajinikanth Top 5 Evergreen Movies : ரஜினியின் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத காலத்தால் அழியாத டாப் 5 எவர்கிரீன் படங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ரஜினியின் டாப் 5 எவர்கிரீன் மூவிஸ்!
Rajinikanth Top 5 Evergreen Movies :தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் தனது சினிமா வாழ்க்கையில் ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அப்படி அவர் வெற்றி கொடுத்த படங்கள் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டால் ஒவ்வொரு படமும் ரூ.2000 கோடிக்கும் அதிகமாகவே வசூல் குவிக்கும். அந்தளவிற்கு அளவிற்கு மகத்தான நல்ல கதையம்சம் கொண்ட படங்களை ரஜினிகாந்த் கொடுத்துள்ளார்.
ரூ.2000 கோடி பாக்ஸ் ஆபிஸ் கொடுக்க கூடிய ரஜினியின் டாப் 5 எவர்கிரீன் மூவிஸ்!
இதில், வில்லன், ஹீரோ, காமெடி கதாபாத்திரம் என்று தன்னால் படத்தில் எந்தளவிற்கு நடிக்க முடியமோ அந்தளவிற்கு தன்னை முழுவதுமாக சினிமாவில் ஈடுபடுத்தி ரசிகர்களுக்காக நடித்துக் கொடுத்துள்ளார். சினிமாவிற்கு வருவதற்கு முன்னதாக பஸ் கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கி நீண்ட போராட்டத்திற்கு பிறகு சினிமாவில் சாதிக்க தொடங்கினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவுக்கு அளித்த எவர் க்ரீன் படங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவுக்கு அளித்த எவர் க்ரீன் படங்களுக்கு பஞ்சமே இல்லை. அவரது ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்பவும் பல மறக்க முடியாத படங்களை ரஜினிகாந்த் கொடுத்துள்ளார். ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய டாப் 5 எவர் க்ரீன் படங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் முழுவதுமாக நாம் பார்ப்போம்.
1 பாட்ஷா: (Baashha – 1995ல் ரிலீஸ்)
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த், ரகுவரன், நக்மா, விஜயகுமார் ஆகியோர் பலர் நடிப்பில் திரைக்கு வந்த படம் தான் பாட்ஷா. படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பாடல்களும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது. ரஜினியின் சினிமா வாழ்க்கையில் இந்தப் படம் ஒரு சிறந்த மைல்கல்லாக அமைந்துள்ளது.
மும்பையின் ரௌடியாக இருந்து கொண்டு பின்னர் எப்படி ஆட்டோ டிரைவரானார் என்ற கதையை மையப்படுத்தி இந்தப் படம் திரைக்கு வந்தது. இது போன்று கதைகள் கொண்ட படங்கள் அதன் பிறகு தமிழ் சினிமாவில் வெளியானதா என்றால் அப்படி எந்தப் படமும் வெளியாகவில்லை.
2 தளபதி (Thalapathi - 1991):
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்மூட்டி, அரவிந்த் சாமி என்று ஒட்டுமொத்த பிரபங்களையும் ஒன்றாக இணைத்த படம் தான் தளபதி. ஒரு உண்மையான தோழன், நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப் படம் ஒரு சிறந்த உதாரணம். இந்தப் படம் ரஜினிகாந்தின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியது. நட்பு, அன்பு, துரோகம் ஆகியவற்றை உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்திய படம் தான் தளபதி. இந்தப் படத்தில் ரஜினி மற்றும் மம்மூட்டியின் காம்பினேஷன் தான் படத்திற்கு பலம், மிகப்பெரிய பிளஸ் எல்லாமே. இனிமேல் இப்படியொரு படம் வருமா என்பது சந்தேகம் தான்.
3 முள்ளும் மலரும் (Mullum Malarum - 1978):
ரஜினிகாந்தின் சிறந்த படங்களில் ஒன்றாக வெளியான படம் தான் 'முள்ளும் மலரும்'. இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் காளி என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் தன் தனித்துவமான நடிப்பால் பலரது பாராட்டுகளையும் பெற்றார். இந்தப் படம் அவருக்கு தமிழ்நாடு அரசு திரைப்பட விருதை பெற்றுத் தந்தது.
4 அண்ணாமலை (Annamalai - 1992):
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான 'அண்ணாமலை', ரஜினிகாந்தின் மாஸ் ஹீரோ பிம்பத்தை வலுப்படுத்திய படங்களில் ஒன்று. ஒரு சாதாரண பால் வியாபாரியாக இருந்து பணக்காரராக உயரும் ஒருவரின் கதையை அதிரடி, நகைச்சுவை, சென்டிமென்ட் கலந்து உணர்வுப்பூர்வமாக கொடுத்திருந்தார் இயக்குநர். இந்தப் படம் மட்டுமின்றீ படத்தில் இடம் பெற்ற பாடல்களும் ரசிகர்களிடையே இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. காலத்தால் அழியாத படங்களில் இந்தப் படங்களும் இடம் பெற்றுள்ளன.
5 படையப்பா (Padayappa - 1999):
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவாஜிகணேசன், மணிவண்ணன், லட்சுமி, சித்தாரா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சௌந்தர்யா என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வெளியான படம் தான் படையப்பா. இந்தப் படம் ரஜினிகாந்தின் மற்றொரு மெகா ஹிட் திரைப்படம். குடும்பம், கவுரவம், பழிவாங்கல் என்ற பின்னணியில் அமைந்த இந்தப் படம், ரஜினியின் அதிரடி மற்றும் நகைச்சுவை கலந்த நடிப்பால் பெரிய வெற்றியைப் பெற்றது. ரம்யா கிருஷ்ணனுக்கு நீலாம்பரி என்ற ஒரு அடையாளத்தை கொடுத்தது. ரஜினியின் ஸ்டைலை வெளிக்காட்டும் படங்களில் இந்தப் படமும் ஒன்று.
காலத்தால் அழியாத சிறந்த எவர்கிரீன் படங்களின் பட்டியல்
ரஜினியின் சினிமா வாழ்க்கையில் காலத்தால் அழியாத சிறந்த எவர்கிரீன் படங்களின் பட்டியலில் இந்த 5 படங்கள் மட்டும் இடம் பெறவில்லை. இந்த 5 படங்கள் தவிர ஆறிலிருந்து அறுபது வரை (Aarilirunthu Arubathu Varai - 1979), எந்திரன் (Enthiran - 2010), சிவாஜி: தி பாஸ் (Sivaji: The Boss - 2007), தில்லு முல்லு (Thillu Mullu - 1981), முத்து (Muthu - 1995), மூன்று முகம் (Moondru Mugam - 1982) ஆகிய படங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த ஒவ்வொரு படங்களும் ரஜினிக்கு தனி முத்திரை பதித்த படங்களாக அமைந்தன.