MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Aishwarya : தனுஷுடனான பிரிவுக்கு பின் தீயாய் வேலை செய்யும் ஐஸ்வர்யா... பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகிறார்

Aishwarya : தனுஷுடனான பிரிவுக்கு பின் தீயாய் வேலை செய்யும் ஐஸ்வர்யா... பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகிறார்

Aishwarya Rajinikanth : தமிழில் 3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Mar 21 2022, 12:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பிரிவதாக அறிவித்த தனுஷ் - ஐஸ்வர்யா 

நடிகர் தனுஷ் கடந்த 20014-ம் ஆண்டு ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது. இத்தம்பதிக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு ஆண் வாரிசுகள் உள்ளனர். 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்த இத்தம்பதி கடந்த ஜனவரி மாதம் விவாகரத்து செய்யப்போவதாக திடீரென அறிவிப்பு வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தனர்.

24

விவாகரத்துக்கு நோ

இவர்களது இந்த அறிவிப்பு தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. மகளின் இந்த திடீர் முடிவால் நடிகர் ரஜினியும், அவரது மனைவி லதாவும் மனமுடைந்து போனார். தனுஷ், ஐஸ்வர்யா இருவரின் மனதை மாற்றி எப்படியாவது மீண்டும் சேர்த்து விட குடும்பத்தினரும், நண்பர்களும் முயன்றனர். அதன் பலனாக இருவரும் விவாகரத்து செய்யும் முடிவை கைவிட்டனர். இருப்பினும் சேர்ந்து வாழப்போவதில்லை என்கிற முடிவில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது.

34

சினிமாவில் ரொம்ப பிசி

பிரிவுக்கு பின்னர் தனுஷும், ஐஸ்வர்யாவும், தங்களது வேலைகளில் முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றனர். நடிகர் தனுஷ், தெலுங்கில் வாத்தி, தமிழில் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதேபோல் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் மீண்டும் இயக்குனராக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அதன்படி அண்மையில் இவர் இயக்கத்தில் வெளியான பயணி என்கிற இசை ஆல்பம் நல்ல வரவேற்பை பெற்றது.

44

இந்தி படம் இயக்கும் ஐஸ்வர்யா

தமிழில் இதுவரை 3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியுள்ள ஐஸ்வர்யா, தற்போது தான் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, ‘ஓ ஷாதி சல்..’ என்கிற இந்திப் படத்தை இயக்க உள்ளார். இதன்மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார் ஐஸ்வர்யா. இப்படம் உண்மை காதல் கதையை மையமாக வைத்து உருவாக உள்ளதாக ஐஸ்வர்யா அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... KGF 2 : நீங்க அவன் குறுக்க போயிடாதீங்க சார்... பாடல் மூலம் விஜய்க்கு வார்னிங் கொடுக்கிறதா KGF 2 படக்குழு?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
Recommended image2
வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?
Recommended image3
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved