ஜெயிலரைப் போன்று ஒரு மாசத்துக்குள்ளேயே ஓடிடிக்கு வரும் கூலி?
Coolie OTT Release and Box Office Collection : ரஜினிகாந்தின் கூலி படம் இன்னும் ஓரிரு மாதத்திற்குள்ளாக ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

Coolie OTT Release and Box Office Collection : தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் தான் கூலி. சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு நாள் முன்னதாக ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது. முழுக்க முழுக்க ரஜினியின் மாஸுக்காக அவருக்காக உருவாக்கப்பட்ட இந்த படம் பேன் இந்தியா படமாக வெளியானது. ஆரம்பத்தில் நெகட்டிவ் விமர்சனங்களை எதிர்கொண்டாலும் பிறகு கலவையான விமர்சனங்களை பெற்றது.
படத்தில் ரஜினியின் நடிப்பிற்கு பிறகு அதிகளவில் பேசப்பட்டது மலையாள நடிகர் சௌபின் ஷாகீரின் நடிப்பு மற்றும் டான்ஸ் தான். குறிப்பாக மோனிகா பாடலில் இவரது டான்ஸ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. மேலும் அந்த பாடலில் பூஜா ஹெக்டேவின் நடிப்பு அந்தளவிற்கு பேசப்படவில்லை. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
படம் வெளியாகி 20 நாட்கள் கடந்த நிலையில் இந்தியாவில் மட்டும் ரூ.281 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. அதோடு, உலகம் முழுவதும் ரூ.507 கோடி வரை வசூல் அள்ளியுள்ளது. படம் வெளியாவதற்கு முன்னதாக ரூ.1000 கோடி வரையில் வசூல் குவிக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், படம் வெளியாகி 20 நாட்களில் ரூ.507 கோடி மட்டும் வசூல் எடுத்துள்ளது.