- Home
- Cinema
- ப்ரீ புக்கிங்கில் சாதனை படைத்து வரும் ரஜினிகாந்தின் கூலி – வெளிநாட்டில் மட்டும் இத்தனை கோடியா?
ப்ரீ புக்கிங்கில் சாதனை படைத்து வரும் ரஜினிகாந்தின் கூலி – வெளிநாட்டில் மட்டும் இத்தனை கோடியா?
Coolie Movie Pre Booking Collection : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் கூலி படத்தின் வெளிநாட்டு ப்ரீ புக்கிங் தொடங்கிய நிலையில் வெளிநாட்டில் மட்டும் தற்போது வரையில் ரூ.5 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ்
Coolie Movie Pre Booking Collection : ஒட்டு மொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ரஜினிகாந்தின் கூலி படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜூனா, ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, ஷோபின் ஷாகிர், சத்யராஜ், ரெபே மோனிகா ஜான், மோனிஷா பிளெஷி ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும், அமிர் கான் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
ரஜினிகாந்த் கூலி
ரூ.350 கோடி முதல் ரூ.400 கோடி வரை பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் இடம் பெற்றுள்ள கூலி டிஸ்கோ, சிக்கிட்டு, மோனிகா, பவர்ஹவுஸ் ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளன.
கூலி டிரைலர்
இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு குறித்து முக்கியமான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் படம் வெளியாக இன்னும் 15 நாட்கள் இருக்கும் நிலையில் படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கியுள்ளது.
ப்ரீ புக்கிங்கில் சாதனை படைத்து வரும் ரஜினிகாந்தின் கூலி
இந்தப் படத்தின் வெளிநாட்டு ப்ரீ புக்கிங் தொடங்கிய நிலையில் தற்போது வரையில் இந்தப் படம் ரூ.5 கோடிக்கும் மேல் வசூல் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூலி ரிலீஸுக்கு முன்பாகவே கோடிக்கணக்கில் வசூல் குவித்து சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் எந்தப் படமும் இல்லாத வசூல் சாதனையை இந்தப் படம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.