Rajinikanth Celebrates Diwali : ஃபேமிலி டைம்..பேரக்குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய ரஜினிகாந்த்
நேற்று தனது பேரப்பிள்ளைகள் மற்றும் மகளுடன் தீபாவளியை ரஜினிகாந்த் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி வாழ்த்து பெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மக ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரபல நடிகர் தனுஷும் 18 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது காதல் திருமணத்தின் பரிசாக யாத்ரா, லிங்கா என இரு பிள்ளைகள் உள்ளனர்.

மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கை சமீபத்தில் பிரிவை சந்தித்தது. தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள் இருக்கையில் இருவரும் விவாகரத்து பெறுவது குறித்து பலரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். ஆனாலும் யாருடைய பேச்சையும் கேட்பதாக இல்லை இவர்கள்.
ஆனாலும் பிள்ளைகளுக்காக அவ்வப்போது ஒரே இடத்தில் கூடி வந்தனர் ஐஸ்வர்யாவும், தனுஷும். பிள்ளை மீது அலாதியான அன்பு கொண்ட இவர்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாவது வழக்கமாகிவிட்டது.
aishwarya rajinikanth
சமீபத்தில் ரஜினிகாந்தின் வீட்டில் இவர்கள் மீண்டும் இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்றதாகவும் .அதற்கு இந்த தம்பதிகள் ஓரளவு சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாக இருந்தது .
aishwarya rajinikanth
முன்னதாக ப்ரோமோஷன் விழாக்களுக்கு மற்றும் இசை விழாக்களுக்கு தனது மகன்களுடன் வந்த தனுஷ் மற்றும் தன் பிள்ளைகளுடன் விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களை கொண்டாடும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புகைப்படங்கள் வெளியாகி வந்தது.
aishwarya rajinikanth
இந்நிலையில் நேற்று கொண்டாடப்பட்ட தீபாவளியை ரஜினிகாந்த் தனது பேரப்பிள்ளைகள் மற்றும் மகளுடன் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி வாழ்த்து பெற்று வருகிறது.