சூர்யாவை விட 6 வயது சிறியவள்; நந்தாவில் சூர்யாவுக்கு அம்மாவாக நடித்தேன்: கருத்தம்மா ராஜஸ்ரீ ஓபன் டாக்!
Rajashree Talk about Suriya's mother Role in Nandhaa Movie : எனக்கு சூர்யாவை விட 6 வயது குறைவு என்றாலும் நந்தாவில் அவருக்கு அம்மாவாக நடித்தேன் என்று நடிகை ராஜஸ்ரீ கூறியுள்ளார்.
Actress Rajashree Act in Surya's Nandhaa Movie
Rajashree Talk about Suriya's mother Role in Nandhaa Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா இப்போது கண்டிப்பான ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தால் இருக்கிறார். என்னதான் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்தாலும் ரசிகர்கள் அவர் மீது இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். சிங்கம் 2 படத்திற்கு பிறகு எதற்கும் துணிந்தவன், காப்பான், என்ஜிகே, தானா சேர்ந்த கூட்டம் என்று ஃபெயிலியர் படங்களை கொடுத்தார். கடைசியாக சிறுத்தை சிவா மற்றும் சூர்யா காம்பினேஷனில் பல கோடி செலவில் எடுக்கப்பட்ட கங்குவா கூட மோசமான விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் கடைசியில் தோல்வியாக முடிந்தது.
Actress Rajshri Nair Tamil Debut Movie Karuthamma
இந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாக கொஞ்சம் அதிகமாகவே பேசியிருந்த சூர்யா கங்குவா வெளியான பிறகு வாயவே திறக்கவில்லை. இப்போது இவரது நடிப்பில் ரெட்ரோ படம் உருவாகியிருக்கிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ரெட்ரோ. இது சூர்யாவின் 44ஆவது படம். முழுக்க முழுக்க கேங்ஸ்டர் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படம் 1980ஸ் காலகட்டங்களில் நடக்கும் சம்பவங்களை நினைவுபடுத்துகிறது.
Rajashree Tamil Debut Movie Karuthamma
காலம் எவ்வளவோ முன்னேறி வந்தாலும் 1990ஸ், 1980ஸ் காலகட்டங்களில் என்ன நடந்தது என்பதை நம்மால் திரும்பி பார்க்க முடியாது. என்றாலும் சினிமா மூலமாக 1980ஸ் எப்படி இருந்தது என்று பார்க்க முடியும். இது உடை, ஸ்டைல் மற்றும் கலாச்சாரத்தை பேசுகிறது. சண்டை காட்சிகள் அல்ல. ஆனால், இந்தப் படம் இந்த எல்லாவற்றின் கலவையாக உருவாகியிருக்கிறது. உதாரணமாக ரஜினிகாந்த், மம்மூட்டி நடிப்பில் வந்த தளபதி படத்தை சொல்லலாம். அதே போன்று ஒரு படமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது.
Rajashree in Nandhaa Movie, Director Bala
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் கிரியேசன்ஸ் நிறுவனம் இணைந்த தயாரித்த இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வரும் 1ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து 45ஆவது படமாக இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும், இந்தப் படம் ஆன்மீக கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு பேட்டைக்காரன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் டைட்டில் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவரவில்லை.
Rajshri Nair Tamil Films, Nandhaa, Rajshri Nair in Nandhaa Movie
இந்த நிலையில் தான் நடிகை ராஜஸ்ரீ (ராஜ்ஸ்ரீ நாயர்)நந்தா படத்தில் நடித்தது பற்றி கூறியிருக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் போது அவர் சூர்யாவை விட 6 வயது சிறியவள். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: நந்தா படத்தில் சூர்யாவை நான் அண்ணா என்று அழைத்தால் என்னை திட்டுவார். ஏனென்ன்றால் அவர் என்னை விட வயது அதிகம். அதனால் நான் அவரை அண்ணா என்று அழைத்தேன். எனினும், நந்தா படத்தில் அவருக்கு நான் அம்மா. சூர்யாவை விட நான் 6 வயது சிறியவள். இருந்தாலும் கூட நான் அவருக்கு அம்மாவாக நடித்தேன் என்று கூறியுள்ளார்.
Rajashree Filmography, Rajashree Tamil Movies,
இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா, ராஜ்கிரண், ராஜஸ்ரீ, லைலா, சரவணன், கருணாஸ் ஆகியோர் பலர் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் நந்தா. இந்தப் படத்தில் சூர்யாவை வித்தியாசமான ரோலில் காட்டியிருப்பார் பாலா. சூர்யாவின் நடிப்பில் வந்த படங்களில் அதிக நாட்கள் ஓடிய படங்களின் பட்டியலில் நந்தா படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Rajashree, Actress Rajashree, Suriya Filmography
தமிழ் சினிமாவில் கருத்தம்மா படம் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் தான் ராஜஸ்ரீ. இந்தப் படத்தில் கருத்தம்மா என்ற ரோலில் நடித்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து நீல குயில், முறை மாப்பிள்ளை, ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே, சேது, அசோகவனம், நந்தா, ரன், மனசெல்லாம், கேம், சபரி, அய்யனார், வத்திக்குச்சி, இறைவி, அரசகுலம், யு டர்ன், வர்மா என்று பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, இங்கிலிஸ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.