ராசியில்லாத ராஜமௌலி.. ஹீரோக்களை மிரட்டும் பிளாக் செண்டிமெண்ட்..
பொதுவாக ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர்களின் படங்களில் நடிக்கும் நடிகர்களின் அடுத்தடுத்த படங்கள் ஹிட்டாகி விடும். ஆனால் பிரமாண்ட படத்திற்கு பெயர் போன ராஜமவுலியின் ஹீரோக்களின் நிலைமையோ தலைகீழாக உள்ளது அது குறித்த சிறு பதிவை இங்கு காணலாம்

rajamouli
பிரபல இயக்குனரான ராஜமௌலிக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக் கொடுத்த படம் 'நான் ஈ'. இதற்கு முந்தைய சில படங்கள் ஹிட் கொடுத்து இருந்தாலும் அந்த வெற்றிக்கு காரணம் நாயகன் தான் என பேசப்பட்டதால் துணிந்து எடுத்த படம் தான் நான் ஈ. ஒரு ஈ -யை நாயகனாக்கி ராஜமௌலி காட்டிய வித்தை உலகம் முழுவதும் பிரபலம். இந்த படத்தில் நாயகனாக நானி நடித்திருந்தார். அதோடு இந்த படம் மூலம் சமந்தாவும் உலகறிந்த நாயனார்.
rajamouli
'நான் ஈ' படத்தை தொடர்ந்து சில தெலுங்கு படங்களிலும் தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியான 'ஆஹா கல்யாணம்' என்னும் படத்திலும் சமீபத்தில் வெளியான ஷ்யாம் சிங்க ராய் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். ஆனால் இதில் எந்த படமும் நான் ஈ அளவிற்கு வெற்றிகளைப் பெற்றுத் தரவில்லை
rajamouli
அடுத்ததாக பாகுபலி நாயகன் பிரபாஸ். பாகுபலி முதல் பாகம் இரண்டாம் பாகம் என இரண்டுமே உலக அளவில் பிரபலம். இந்த படத்தின் மூலம் பான் வேர்ல்ட் நாயகனாக தரம் உயர்ந்துவிட்டார் பிரபாஸ். பாகுபலியில் ஒவ்வொரு காட்சியிலும் பிரபாஸின் நடிப்பு ரசிகர்களால் மிக மிஞ்சிய அளவிற்கு பாராட்டப்பட்டது. அதோடு இந்த இரண்டு பாகமுமே வசூலில் சாதனை படைத்தது.
மேலும் செய்திகளுக்கு... தொடர் தோல்வி.. பாணியை மாற்றிய ஆர்யா..விருமன் இயக்குனருடன் கிராமத்துக்கு செல்ல முடிவு..
rajamouli
ஆனால் பாகுபலியை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் வெளியான சாகோ,ராதே ஷ்யாம், உள்ளிட்ட படங்கள் படு தோல்வியை சந்தித்தன. உலக நாயகனாக இருந்த போதிலும் பிரபாஸின் அடுத்தடுத்த படங்கள் தோல்வியை கண்டது ரசிகர்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியது.
rajamouli
தற்போது வெளியாகி மாஸ் காட்டிய ஆர்ஆர்ஆர் நாயகனைப் பற்றி பார்க்கலாம். சுதந்திர போராட்ட வீரர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் என இருபெரும் நாயகர்கள் கலக்கி இருந்தனர். முந்தைய ராஜமௌலியின் வெற்றிப்படமான மகதீரா படத்தில் நடித்த ராம்சரண் ,அதேபோல ராஜமௌலியின் முதல் படமான ஸ்டூடண்ட் நம்பர் ஒன் படத்தில் ஜூனியர் என்டிஆர் என இவ்விருவரையும் வைத்து சமீபத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் ராஜமவுலி இயக்கி ஆர்ஆர்ஆர் படம் உலகளவில் பாகுபலி வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
rajamouli
ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து அதன் நாயகன் ராம் சரண் அடுத்த படமாக நடித்திருந்த 'ஆச்சார்யா' நேற்று வெளியாகி இருந்தது. இந்த படத்தில் ராம்சரணின் தந்தை சிரஞ்சீவியும் நடித்துள்ளார். இருபெரும் நாயகர்களை கொண்ட இந்த படம் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்று வருகிறது.
மேலும் செய்திகளுக்கு... திவ்யபாரதியின் சேலை கிளாமர்...வழவழ சாரியில் இளசுகளை மயக்கும் போஸ்..
rajamouli
இவ்வாறு தனது ஹிட் படங்களில் நடித்த ஹீரோக்களின் அடுத்தடுத்த படங்கள் பிளாப் ஆவது. சினிமா வட்டாரத்தில் ஒரு சிறந்த இடத்தை பிடிக்க வேண்டும் என போராடிக்கொண்டிருக்கும் நடிகர்கள் மத்தியில் ராஜமௌலி குறித்த பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என பேசப்படுகிறது.