‘அந்த’ ஊசி போட்டு மார்பகத்தை பெரிதாக்க சொன்னாங்க... பகீர் தகவலை வெளியிட்ட ரஜினி பட ஹீரோயின்
Radhika Apte : சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு போகும்போது உடம்பிலும், முகத்திலும் அறுவை சிகிச்சை செய்ய சொன்னதாக நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
தமிழில் பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் வெளியான தோனி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. இதையடுத்து பாலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கு முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியதன் மூலம் பேமஸ் ஆனார். இதையடுத்து அங்கு பட வாய்ப்புகள் குவிந்ததால் பிற மொழிகளில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
பின்னர் கடந்த 2016-ம் ஆண்டு பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி படம் மூலம் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் நடிப்பில் தற்போது பாரின்ஸிக் என்கிற வெப் தொடர் உருவாகி உள்ளது. இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சினிமாவில் தான் சந்தித்த பாடி ஷேமிங் பிரச்சனைகள் குறித்து பேசி உள்ளார்.
அதில் அவர் கூறியதாவது : ஆரம்ப காலத்தில் சினிமாவில் எனக்கு நிறைய அழுத்தம் இருந்தது. நான் வாய்ப்பு கேட்டு போகும்போது எனது உடம்பிலும் முகத்திலும் அறுவை சிகிச்சை செய்ய சொன்னார்கள். முதலில் ஒருவர் மூக்கில் மாற்றம் செய்யச் சொன்னார். பின்னர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்து மார்பகத்தை பெரிதாக்கினால் வாய்ப்பு கிடைக்கும் என வற்புறுத்தினார்கள்.
பின்னர் தாடை, கண்ணம், கால்கள் என பல்வேறு பாகங்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள். ஒருகட்டத்தில் போட்டாக்ஸ் ஊசி போடச் சொன்னார்கள், நான் முடியாது என்றேன். இது எனது வளர்ச்சிக்கும் தடையாக இருந்தது. இவையெல்லாம் நான் என்னுடைய உடலை அதிகம் நேசிக்க உதவியது. இப்போது நான் என் உடலை மிகவும் நேசிக்கிறேன்” என கூறினார்.
இதையும் படியுங்கள்... கூட்டத்தில் கையை பிடித்து இழுத்த நபர்... திரும்பி ‘என்னடா’னு எகிறிய நயன்தாரா - திருப்பதியில் திடுக் சம்பவம்