MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Raayan Box Office : தொடரும் வசூல் வேட்டை... பாக்ஸ் ஆபிஸில் மகாராஜா பட சாதனையை 9 நாளில் காலி செய்த ராயன்

Raayan Box Office : தொடரும் வசூல் வேட்டை... பாக்ஸ் ஆபிஸில் மகாராஜா பட சாதனையை 9 நாளில் காலி செய்த ராயன்

தனுஷ் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள ராயன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மகாராஜா பட சாதனையை முறியடித்து உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 05 2024, 09:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Maharaja, Garudan, Raayan

Maharaja, Garudan, Raayan

2024-ம் ஆண்டின் முதல் பாதி தமிழ் சினிமாவுக்கு சோதனை மிக்கதாகவே இருந்தது. ஏனெனில் இந்த ஆண்டின் முதல் 5 மாதத்தில் ஒரு தமிழ் படம் கூட 100 கோடி வசூல் சாதனையை எட்டவில்லை. அந்த காலகட்டத்தில் சிவகார்த்திகேயன், தனுஷ், ரஜினி, ஜெயம் ரவி போன்ற டாப் நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகியும் அது எடுபடவில்லை. அப்படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால், பரிதாப நிலையில் இருந்த தமிழ் சினிமாவை சுந்தர் சி-யின் அரண்மனை 4 திரைப்படம் தான் மீட்டெடுத்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
maharaja

maharaja

அரண்மனை 4 திரைப்படம் தான் இந்த ஆண்டு ரூ.100 கோடி வசூல் அள்ளிய முதல் தமிழ் படமாகும். அதன்பின்னர் சூரியின் கருடன், விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா ஆகியவை அடுத்தடுத்து ஹிட் ஆனதால் கோலிவுட் படிப்படியாக மீண்டு வருகிறது. அதிலும் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.109 கோடி வசூலித்து இருந்தது. அப்படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை தனுஷின் ராயன் படம் முறியடித்துள்ளது.

இதையும் படியுங்கள்... இவங்கெல்லாம் கிளாஸ்மேட்ஸா? பள்ளியில் ஒன்றாக படித்த சினிமா பிரபலங்கள் லிஸ்ட் இதோ

34
raayan, maharaja

raayan, maharaja

தனுஷ் நடித்த ராயன் திரைப்படம் கடந்த ஜூலை 26-ந் தேதி திரைக்கு வந்தது. 50வது படமான இதில் ஹீரோவாக நடித்திருந்தது மட்டுமின்றி இயக்கியும் இருந்தார் தனுஷ். ராயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இப்படம் தற்போது திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இரண்டு வாரங்களை கடந்து வெற்றிநடை போட்டு வரும் ராயன் திரைப்படம் வசூலிலும் பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறது.

44
raayan box office record

raayan box office record

அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா திரைப்படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை ராயன் திரைப்படம் 9 நாட்களில் முறியடித்துள்ளது. ராயன் திரைப்படம் தற்போதைய நிலவரப்படி ரூ.114 கோடி வசூலித்து உள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு அதிக வசூல் ஈட்டிய தமிழ் படங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது ராயன். முதலிடத்தில் ரூ.140 கோடி வசூல் உடன் இந்தியன் 2 திரைப்படம் உள்ளது.

இதையும் படியுங்கள்... கமல் ஸ்ரீதேவி முதல் சூர்யா ஜோதிகா வரை; அட அட என்ன ஒரு கெமிஸ்ட்ரினு சொல்ல வைத்த டாப் 5 கோலிவுட் காதல் ஜோடிகள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தனுஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ravi Mohan : 3 எழுத்து இட்லி நடிகை... உனக்கு என்ன அருகதை இருக்கு என்ன பத்தி பேச - வெளுத்துவாங்கிய ரவி மோகன்
Recommended image2
Indrans : ஆளு தான் ஒல்லி; நடிப்பில் கில்லி... கருப்பு படத்தில் சூர்யாவையே மிஞ்சிட்டாரு - யார் இந்த இந்திரன்ஸ்?
Recommended image3
Ethirneechal Thodargiradhu : குணசேகரனுக்கு செக் வைத்த நீதிமன்றம்... ஈஸ்வரிக்கு காத்திருக்கும் சவால்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved