தீபாவளியை முன்னிட்டு கிளாமரை குறைத்து கொண்ட ராய் லட்சுமி சூப்பர் கூல் போட்டோஸ் இதோ
அடக்கமாக இருக்கும் இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தீபாவளி ஸ்பெஷலா என கேட்டு வருகின்றனர்.
Raai Laxmi
சூப்பர் மாடலாக அறிமுகமான ராய் லட்சுமி. தென்னிந்திய மொழிகளில் அறியப்பட்ட நாயகிகளில் ஒருவராக இருக்கிறார். முன்னதாக குறும்படம் மூலம் தான் கலைத்துறைக்கு அறிமுகம் ஆகி இருந்தார் ராய் லட்சுமி.
Raai Laxmi
இயக்குனர் ஆர்பி உதயகுமாரன் இயக்கத்தில் குறும்படத்தில் நடித்த அனுபவத்தை வைத்து மீண்டும் அவரது இயக்கத்திலேயே கற்க கசடற படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார்.
Raai Laxmi
பின்னர் பார்த்திபன் நடித்த குண்டக்க மண்டக்க படத்திலும், விஜயகாந்த் உடன் பேரரசு, தர்மபுரி உள்ளிட்ட படங்களிலும் தோன்றினார் ராய் லட்சுமி.
Raai Laxmi
நான் அவன் இல்லை, வாமணன், முத்திரை, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், அரண்மனை, சவுகார்பேட்டை, மொட்டை சிவா, கெட்ட சிவா, மேதை என பல படங்களில் நடித்துள்ளார்.
Raai Laxmi
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களில் நடித்த போதிலும் இவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தமிழில் ஹாலிவுட் நாயகி ரேஞ்சுக்கு கவர்ச்சியை கொட்டி ரசிகர்களை ஈர்த்து வருகிறார் ராய் லட்சுமி.
Raai Laxmi
வெள்ளாவி வைத்து தான் வெளுத்தார்களா என்னும் அளவிற்கு செக்கச் செவேர் என இருக்கும் இவரை அரேபியன் குதிரை என ரசிகர்கள் வர்ணிப்பது உண்டு.
Raai Laxmi
தற்போது ஆனந்த பைரவி, கேங்ஸ்டர் 21 உள்ளிட்ட படங்களில் மட்டும் ஒப்பந்தமாகியுள்ள இவர் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
Raai Laxmi
தற்போது பாலிவுட் பக்கம் தனது பார்வையை திருப்பி உள்ளார் ராய் லட்சுமி. அதற்காக சோசியல் மீடியாவில் முன்பை விட அதிக கவர்ச்சிகளை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
Raai Laxmi
புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதில் தீயிட்டு வருகிறது. தற்போது அந்த கவர்ச்சிக்கெல்லாம் லீவு விட்டு, தாவணி பாவாடையில் சொக்க வைக்கும் போஸை கொடுத்துள்ளார். அடக்கமாக இருக்கும் இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தீபாவளி ஸ்பெஷலா என கேட்டு வருகின்றனர்.