வாவ்...வெளியாகிடுச்சு புஷ்பா 2 அப்டேட்..என்ன விஷயம் தெரியுமா?
புஷ்பா 2 குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த தகவலில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி அதாவது நாளை புஷ்பா தி ரூல் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்க உள்ளதாக கூறியுள்ளனர்.
அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள புஷ்பா தி ரைஸ் திரைப்படம் விமர்சன ரீதியான பாராட்டுகளை பெற்றதோடு, வசூலையும் குவித்திருந்தது. சுகுமார் இயக்கத்தில் வெளியாகியிருந்த இந்த படத்தில் பகத் பாசில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களை வெகுவாகவே ஈர்த்துவிட்டது என்று கூறலாம்.
அதோடு 'ஓ சோல்றியா மாமா' பாடலில் சமந்தா ஆடிய கவர்ச்சி நடனம் உலக அளவில் புகழ்பெற்றது. இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்யாதவர்களே கிடையாது எனக்கு கூறலாம். அதோடு புஷ்பா படம் ஃபேன் இந்தியா படமாக வெளியாகி நாயகனை ஃபேன் இந்தியா நாயகனாக மாற்றியது. இதனால் அல்லுவின் மார்க்கெட் கூடிவிட்டது.
மேலும் செய்திகளுக்கு...விக்ரமில் ஏன் காட்சி தரவில்லை..பரபரப்பு கேள்விக்கு பக்காவான பதில் சொன்ன கார்த்தி
அதோடு ஸ்ரீ வள்ளியாக வரும் ராஷ்மிக்கா மந்தனா அளவான மேக்கப்புடன் அசத்தலான நடிப்புடனும் அனைவரின் மனதையும் கவர்ந்திருந்தார். இதனால் இவருக்கு தமிழில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. ராஷ்மிகா தற்போது விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். அதேபோன்று தான் பகத்தும் இவர் சமீபத்தில் பிளாக்பஸ்டர் படமான விக்ரம் படத்தில் உளவுத்துறை அதிகாரியாக மாஸ் கட்டி இருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...அரைகுரை ஆடையில் ஜிம்மில் இருந்து வெளிவந்த நேஹா ஷர்மா
pushpa 2 begins tomorrow allu arjun fahadh faasil sukumar mythri movie makers
புஷ்பா படம் பாக்ஸ் ஆபிஸில் 322.6 கோடிகளை வசூலாகா பெற்று சாதனை படைத்திருந்தது. இதன் மூலம் அல்லு அர்ஜுன் 300 கோடி வசூலை அசால்டாக தட்டிச்செல்லும் நடிகர்களில் ஒருவரானார். மேலும் புஷ்பா தி ரைஸ் என பெயரிடப்பட்ட இந்த படம் அடுத்த பாகமான புஷ்பா தி ரூலுக்கான விதைகளை விதைத்திருந்தது. இது குறித்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு...கணவன் மற்றும் மகனுடன் பிங்க் நிற பனியனில் தென்பட்ட கரீனா கபூர்
இதற்கிடையே கேஜிஎப் அத்தியாயம் 2வை பார்த்த இயக்குனர் புஷ்பாபுவிற்கு மேலும் மெருகேற்ற எண்ணி படப்பிடிப்பை சிறிது காலம் ஒத்தி வைப்பதாக தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்தனர்.
pushpa 2
இந்நிலைகள் புஷ்பா 2 குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த தகவலில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி அதாவது நாளை புஷ்பா தி ரூல் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்க உள்ளதாக கூறியுள்ளனர். முன்னதாக படத்தின் நாயகி அதாவது ஸ்ரீ வள்ளி கொல்லப்படுவார் என்று தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் அதனை பட குழு முற்றிலும் மறுத்து இருந்தது.
அதோடு விஜய் சேதுபதி முந்தைய பாகத்திலேயே ஒப்பந்தமாக இருந்து சில காரணங்களால் இந்த திட்டம் கைவிடப்பட்டதால் மீண்டும் இரண்டாம் பாகத்திலாவது இவரை காணலாம் என்கிற எதிர்பார்ப்பும் எகிரி உள்ளது. தற்போது புஷ்பா 2 படத்தின் அப்டேட் போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.