'புஷ்பா 2' ரிலீஸ் எப்போது? சமூக வலைத்தளத்தில் தீயாக பரவும் தகவல்!
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும், 'புஷ்பா 2' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பிய திரைப்படம் புஷ்பா. செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த, 'புஷ்பா தி ரைஸ்' திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த அசத்தி இருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.
வில்லனாக சுனிலும், முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரியாக பகத் பாசிலும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்ததோ, அதே அளவிற்கு இப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக ஸ்ரீவள்ளி பாடல் மற்றும் ஊ சொல்றியா மாமா பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.
சைடு போஸில் செம்ம அழகு..! புன்னகை பூவாக மாறி ரசிகர்களை கவரும் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஸ்!
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் பல்வேறு இடங்களில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அவ்வப்போது புஷ்பா படம் குறித்து, சில தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வட்டமிட்டு வரும் நிலையில், தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி 'புஷ்பா தி ரூல்' படத்தின் படபிடிப்பு, 35% முதல் 40% வரை முடிவடைந்து விட்டதாகவும், இந்த படத்தை ஏப்ரல் 2024-ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.