#காமவெறியர்களை_தூக்கிலிடு.... சிறுமி பாலியல் வன்கொடுமையை கண்டு கொந்தளிக்கும் திரைப்பிரபலங்கள்...!

First Published 3, Jul 2020, 4:59 PM

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார் கோவிலில் 7 வயது சிறுமி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, உடலில் காயங்களுடன் ஊரணியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 7 வயது சிறுமி என்றும் பாராமல் விவரம் தெரியாத பச்சை மண்ணை இப்படி சீரழித்தவர்களை உடனடியாக தூக்கிலிட வேண்டுமென கோரிக்கைகள் வலுத்து வருகிறது. சிறுமியின் பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? மற்றும் ஒரு குழந்தை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இப்படிப்பட்ட உலகில் தான் நாம் வாழந்து கொண்டிருக்கிறோம் என்றால் நாம் அனைவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சாக தகுதியுடையவர்கள் தான்... அது தான் மனிதர்களாகிய நமக்கு கடவுளின் பதிலாகவும் இருக்கும்.. நாம் அனைவரும் வாழத்தகுதி அற்றவர்கள்.... என நடிகை வரலட்சுமி கோவத்துடன் கொந்தளித்துள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால்,  புதுக்கோட்டை சம்பவம் இதயத்தை நொறுக்கிறது. ஒரு சமூகமாக நாம் தோல்வியடைகிறோம் என்றும், இதை மாற்ற வேண்டும் என்றும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மற்றொரு நாள், மற்றொரு இதயத்தை உடைக்கும் செய்தி, மற்றொருவன்முறை, மற்றொரு கற்பழிப்பு, மற்றொரு பாதிக்கப்பட்டவர்... இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என நடிகை ஹன்சிகா மோத்வானி பதிவிட்டுள்ளார்.

எவ்வித நம்பிக்கையும் இல்லாத சமூகத்தில் இருந்து நீதி கேட்டு வெறுத்து போய்விட்டதாக நடிகர் ஜெயம் ரவி ட்வீட் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் மற்றொரு சோகமான நிகழ்வு நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள நடிகை அதுல்யா ரவி, சமூக ஊடகங்களில் அழுவது ஒரு தீர்வல்ல என்று தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டணை வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில், நாளை இதுபோன்று மற்றொரு சம்பவம் நடக்கும் என்றும் கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரரும், நடிகருமான ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், செதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே. பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க? எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க! உலகம் அழியப்போகல..அழிச்சுக்கிட்டு இருக்கோம்.நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்புடின்னு சும்மா சொல்லிட்டுப் போகல.ரொம்ப கஷ்டமா இருக்குயா என மிகுந்த வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

loader