சூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் கசிந்ததால் 'தளபதி 66' படப்பிடிப்பை நிறுத்திய தயாரிப்பு நிறுவனம்!
'தளபதி 66' படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியான காரணத்தால் படப்பிடிப்பு சில நாட்கள் நிறுத்தப்பட்டது. மேலும் செட் மீண்டும் உருவாக்கப்பட்டவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.

Thalapathy Vijay
வம்சி பைடிப்பள்ளியுடன் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக ' தளபதி 66 ' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில படங்கள் கசிந்தன. மேலும் அவை மூலம் நடிகரின் தோற்றம் தெரியவந்தது. இதனால் தற்போது படப்பிடிப்பை தயாரிப்பாளர்கள் மாற்றியுள்ளனர். 'தளபதி 66' படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈசிஆர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்தது. விஜய்யின் படங்கள் மற்றும் வீடியோக்கள் குடியிருப்புப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் அத்துமீறலுக்கு எதிராக சில நடவடிக்கை எடுக்குமாறு தயாரிப்பாளர்களிடம் ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர். எனவே, படப்பிடிப்பை வேறு ஒரு தனி இடத்திற்கு மாற்றிய தயாரிப்பாளர்கள் தற்போது செட் பணிகள் நடைபெற்று வருகிறது.
Thalapathy Vijay
எனவே, 'தளபதி 66' படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நிறுத்தப்பட்டது. இதனால் படப்பிடிப்பு தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் செட் மீண்டும் உருவாக்கப்பட்டவுடன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என கூறப்படுகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து படங்கள் கசிந்தது தயாரிப்பாளர்களின் வேலையை இரட்டிப்பாக்கியுள்ளது.
Thalapathy Vijay
'தளபதி 66' படத்திற்காக விஜய் 'மாஸ்டர்' மாதிரியான தோற்றத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இப்படம் உணர்ச்சிகரமான குடும்ப நாடகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க, பிரகாஷ் ராஜ் , பிரபு, ஸ்ரீநாத், ஷாம் , யோகி பாபு , குஷ்பு, சங்கீதா, சம்யுக்தா ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். தமன் முதன்முறையாக விஜய்க்கு இசையமைக்கிறார். மேலும் படம் 2023 பொங்கலுக்கு வெளிவர உள்ளது. இதற்கிடையில், தெலுங்கில் மகேஷ் பாபு இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது,
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.