காத்துவாங்கும் விடாமுயற்சி... களைகட்டும் லியோ! தயாரிப்பாளர் வெளியிட்ட அடுக்கடுக்கான அப்டேட் இதோ
லியோ படத்தின் இண்டர்வெல் காட்சி மற்றும் கிளைமாக்ஸ் காட்சி குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.
Thalapathy Vijay, Ajithkumar
2023-ம் ஆண்டு தொடக்கமே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான அஜித் - விஜய் படங்களின் மோதலுடன் ஆரம்பித்தது. இதையடுத்து அவர்கள் நடிப்பில் உருவாகும் அடுத்த படங்களுக்கான போட்டியும் ஆரம்பித்தது. இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஜனவரி மாதம் தொடங்க இருந்தது. அதில் திட்டமிட்டபடி விஜய்யின் லியோ பட ஷூட்டிங்கை தொடங்கினர். ஆனால் அஜித்தின் ஏகே 62 படத்தில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதால் அப்படத்தின் ஷூட்டிங் தாமதமானது.
Vidaamuyarchi Ajith
இதையடுத்து லியோ பட படப்பிடிப்பு ஜெட் வேகத்தில் நடைபெற, மே மாதம் தான் ஏகே 62 படத்தின் முதல் அப்டேட்டே வந்தது. அதன்படி அப்படத்துக்கு விடாமுயற்சி என பெயரிடப்பட்டு உள்ளதாகவும், மகிழ் திருமேனி அப்படத்தை இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் விறுவிறுவென வேலை செய்து லியோ படக்குழு கடந்த ஜூலை மாதமே ஒட்டுமொத்த ஷுட்டிங்கையும் முடித்துவிட்டனர். ஆனால் அஜித் ரசிகர்களோ அடுத்த அப்டேட் எப்போ வரும் என ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸை மிரட்டும் 'ஜெயிலர்'..! 12 நாட்களில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?
Vijay, Lokesh Kanagaraj
லியோ திரைப்படம் ஷூட்டிங் தொடங்கும் முன்பே அப்படம் அக்டோபர் மாதம் 19-ந் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படியே வெற்றிகரமாக ரிலீஸை நெருங்கி வருகிறது. ஆனால் இன்னும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கே தொடங்கியபாடில்லை. ஒரு அப்டேட்டாவது கிடைத்துவிடாதா என ஏங்கிக் கொண்டிருக்கும் அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றும் வகையில், லியோ படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளது.
Vijay, Lalit Kumar
அந்த வகையில் தயாரிப்பாளர் லலித் குமார் சமீபத்திய பேட்டியில் லியோ படத்தின் அடுக்கடுக்கான அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளார். அதன்படி லியோ படத்தின் இண்டர்வெல் பிளாக் பார்த்தபோது எங்களுக்கே புல்லரித்தது. அந்த இடைவேளை காட்சி 8 நிமிடம் வரும். அந்த காட்சி முழுவதும் நிச்சயம் ரசிகர்கள் ஆர்ப்பரிப்பார்கள். அதேபோல் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அவெஞ்சர் எண்ட்கேம் போல் வேறலெவலில் இருக்கும். மேலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் முறியடிக்க முடியாத சாதனையை படைக்கும் என்று சொல்லி உள்ளதால் விஜய் ரசிகர்கள் செம்ம குஷியாகி உள்ளனர்.
இதையும் படியுங்கள்... கற்பனைக்கு அப்பாற்பட்ட படைப்பாக உருவாகும் சிரஞ்சீவியின் 157-ஆவது படம்! பிறந்தநாளில் வெளியான அறிவிப்பு!