MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நயன்தாரா, திரிஷா லிஸ்ட்லயே இல்ல; இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா?

நயன்தாரா, திரிஷா லிஸ்ட்லயே இல்ல; இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா?

நயன்தாரா, திரிஷா ஆகியோர் ரூ.15 கோடி வரை சம்பளம் வாங்கி வந்தாலும் அவர்களை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 31 2025, 02:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அதிக சம்பளம் வாங்கும் நடிகை

அதிக சம்பளம் வாங்கும் நடிகை

சினிமாவில் ஹீரோக்களுக்கு தான் அதிக டிமாண்ட் உள்ளது என்பதை அவர்கள் வாங்கும் சம்பளத்தை வைத்தே தெரிந்துகொள்ளலாம். குறிப்பாக ஒரு காலத்தில் 100 கோடிக்கும் குறைவாக இருந்த நடிகர்களின் சம்பளம் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜெட் வேகத்தில் அதிகரித்து தற்போது 300 கோடியை எட்டிவிட்டது. ஹீரோக்களின் சம்பளம் உயர்ந்தாலும் ஹீரோயின்களின் சம்பளம் இன்னும் உயர்ந்தபாடில்லை. இதுவரை ஒரு நடிகை கூட 50 கோடியை தொட்டதில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
திரிஷா, நயன்தாரா சம்பளம்

திரிஷா, நயன்தாரா சம்பளம்

இந்த நிலையில், கோலிவுட் மட்டுமல்ல பாலிவுட், டோலிவுட் என அனைத்து திரைத்துறையிலும் உள்ளது. கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளாக திரிஷா மற்றும் நயன்தாரா ஆகியோர் உள்ளனர். அவர்கள் ஒரு படத்திற்கு தலா ரூ.10 முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றனர். ஆனால் இந்திய அளவில் இவர்களைவிட பாலிவுட் நடிகைகளுக்கு சம்பளம் வாரி வழங்கப்பட்டு வருகிறது. அங்கு தீபிகா படுகோனே தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார்.

35
பிரியங்கா சோப்ரா சம்பளம்

பிரியங்கா சோப்ரா சம்பளம்

நடிகை தீபிகா படுகோனே ஒரு படத்துக்கு ரூ.20 முதல் 25 கோடி வரை வாங்கி வருகிறார். கடந்த ஆண்டு வரை அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக தீபிகா படுகோனே இருந்து வந்த நிலையில், தற்போது அவரை ஓவர்டேக் செய்துள்ள பிரபல நடிகை ஒரு படத்திற்கு ரூ.30 கோடி சம்பளம் வாங்கி இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அந்த நடிகை வேறுயாருமில்லை பாலிவுட் நாயகி பிரியங்கா சோப்ரா தான். 

இதையும் படியுங்கள்... Priyanka Chopra : அயோத்திக்கு ஆன்மீக சுற்றுலா சென்று... ராமரோடு செல்பி எடுத்து மகிழ்ந்த நடிகை பிரியங்கா சோப்ரா

45
ராஜமவுலி படத்தில் பிரியங்கா சோப்ரா

ராஜமவுலி படத்தில் பிரியங்கா சோப்ரா

அமெரிக்காவில் செட்டில் ஆன பின்னர் ஹாலிவுட் படங்களில் மட்டுமே நடித்து வந்த பிரியங்கா சோப்ரா, தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ssmb29 திரைப்படத்தின் மூலம் மீண்டும் இந்திய சினிமாவுக்கு திரும்பி இருக்கிறார். இப்படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் பிரியங்கா சோப்ரா. இப்படத்தை சுமார் 1000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டு உள்ளனர்.

55
மகேஷ் பாபு ஜோடியாகும் பிரியங்கா சோப்ரா

மகேஷ் பாபு ஜோடியாகும் பிரியங்கா சோப்ரா

ssmb29 படத்தின் படப்பிடிப்பை முழுக்க முழுக்க வெளிநாட்டில் தான் நடத்த உள்ளாராம் ராஜமவுலி. இப்படத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைய 3 முதல் 4 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது. இப்படத்தில் நாயகியாக நடிக்க தான் நடிகை பிரியங்கா சோப்ரா ரூ.30 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார். பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் போன்ற பிரம்மாண்ட வெற்றிப் படங்களை கொடுத்த ராஜமவுலி இப்படத்தை உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டுள்ளாராம்.

இதையும் படியுங்கள்... Patch Work பண்ணி ஏமாத்திட்டாங்க... ரூ.160 கோடி கொடுத்து வாங்கிய வீட்டில் இருந்து வெளியேறிய பிரியங்கா சோப்ரா

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!
Recommended image2
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Recommended image3
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved