Priyanka Mohan: இது பிறந்தநாள் ஸ்பெஷலா? டாக்டர் படக்குழுவுடன் எடுத்து கொண்ட வேற லெவல் புகைப்படங்கள்!
டாக்டர் பட நாயகி பிரியங்கா மோகன் (Priyanka Mohan), தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனின் (sivakarthikeyan) டாக்டர் பட குழுவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தன்னுடைய எளிமையான அழகால் தமிழ் ரசிகர்கள் மனதை வசீகரித்து வரும், 'டாக்டர்' பட நாயகி பிரியங்கா அருள் மோகன் 1994 ஆம் ஆண்டு 20 ஆம் தேதி சென்னையில் பிறந்தவர்.
இன்று தன்னுடைய 27 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் இவர், தன்னுடைய பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக, டாக்டர் பட குழுவுடன் எடுத்து கொண்ட சில ரேர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இவர் கன்னடத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'ஒந்து கதை ஹெல' என்கிற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
பின்னர் அதே ஆண்டு நடிகர் நானி நடிப்பில் வெளியான 'கேங் லீடர்' படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து, தெலுங்கு பட வாய்ப்புகளும் தமிழ் பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது.
அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டாக்டர்' படத்தில் நடித்து தன்னுடைய எளிமையான அழகால் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.
இந்த படத்தின் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக மீண்டும் சிவகார்த்திகேயனுடன் 'டான்' படத்திலும் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
அடுத்தடுத்த படங்களில் படு பிசியாகி வரும் பிரியங்கா அருள் மோகன், பிடித்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள, கலக்கலான புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் இன்று தன்னுடைய பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, டாக்டர் பட குழுவினருடன் எடுத்து கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதோடு... ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகிறது.