கிழிந்த பேன்டில்... துளியும் மேக்கப் போடாமல் அழகில் மயக்கும் பிரியங்கா மோகன்! கியூட் போட்டோ ஷூட்!
நடிகை பிரியங்கா மோகன், மனதை மயக்கும் அழகில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள்... சமூக வலைத்தளத்தில், வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தெலுங்கில் நடிகர் நானிக்கு ஜோடியாக கேங்லீடர், படத்தின் மூலம் அறிமுகமானவர்... நடிகை பிரியங்கா அருள் மோகன். முதல் படத்திலேயே தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.
பார்ப்பதற்கு பக்கத்துக்கு விட்டு பெண் போல் இருக்கும் இவரின் எதார்த்தமான அழகு, தமிழ் சினிமாவிலும் இவருக்கு வாய்ப்பை பெற்று கொடுத்தது. அந்த வகையில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார்.
இவர் அறிமுகமான முதல் படமே 100 கோடி வசூல் கிளப்பில், இணைந்த நிலையில், இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடி போட்டது மட்டும் இன்றி, சூர்யாவுக்கு ஜோடியாக 'எதற்கும் துணிந்தவன்' படத்திலும் நடித்தார்.
தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க கமிட் ஆகி வரும் பிரியங்கா மோகன், சமீக காலமாக கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாக்கி வருகிறார்.அந்த வகையில், கிழிந்த பேன்ட் மற்றும் சிவப்பு நிற கிராப் டாப் அணிந்து, மிதமான கவர்ச்சியில்... துளியும் மேக்கப் இன்றி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
மேலும் தற்போது தனுஷுக்கு ஜோடியாக கேப்டன் மில்லர் திரைப்படத்திலும், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கும் பெயரிடப்படாத திரைப்படம் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.