பிரியதர்ஷன்-லிஸ்ஸியின் மகன் சித்தார்துக்கு நடந்த திடீர் திருமணம்! அமெரிக்காவை சேர்ந்த காதலியை கரம்பிடித்தார்!
பிரபல திரைப்பட இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிசின் மகனான சித்தார்த்துக்கு, அமெரிக்காவைச் சேர்ந்த, மெர்லின் என்பவருக்கும் திடீர் என திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கடந்த 40 வருடங்களாக இந்திய திரை உலகில் முன்னணி இயக்குனராகவும், எழுத்தாளராகவும், இருந்து வருபவர் இயக்குனர் பிரியதர்ஷன். இதுவரை சுமார் 95 படங்களை தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என நான்கு மொழிகளில் இயக்கியுள்ளார்.
பிரியதர்ஷன் கடந்த 1990 ஆம் ஆண்டு மலையாள நடிகையான லிசியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். லிசி மலையாளத்தில் சுமார் சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் நடிகர் கமலஹாசன் நடித்து 1996 ஆம் ஆண்டு வெளியான விக்ரம், ஆனந்தி ஆராதனை, மனசுக்குள் மத்தாப்பு, பகலில் பொறுமை, போன்ற சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பின்னர் திரையுலகை விட்டு விலகிய லிசி, தன்னுடைய மகள் கல்யாணி மற்றும் மகன் சித்தார்த் ஆகியோரை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வந்தார். மேலும் இந்த நட்சத்திர தம்பதி கடந்த 2016 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
தற்போது ப்ரியதர்ஷன் - லிசி தம்பதிகளில் மூத்த மகளான கல்யாணி திரையுலகில் ஹீரோயினாக கலக்கி வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹீரோ மற்றும் சிம்புவுக்கு ஜோடியாக மாநாடு ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதில் மாநாடு படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
BREAKING: பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானர்; மறைந்தது கானக் குயில்!!
இந்நிலையில் கல்யாணி ப்ரியதர்ஷனின், சகோதரர் சித்தார்த் ப்ரியதர்ஷனுக்கும், அமெரிக்காவை சேர்ந்த... மெர்லின் என்பவருக்கும் திடீர் என திருமணம் நடந்துள்ளது. மெர்லின் விஷுவல் எபெக்ட் புரொடியூசராக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இவர்களின், திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.