கொட்டும் அருவியில்... சொட்ட சொட்ட நனைந்து குளியல் போட்ட பிரியா பவானி ஷங்கர்! பார்த்து பார்த்து ஏங்கும் இளசுகள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பட்டியலுக்கு முன்னேறி வரும் பிரியா பவானி ஷங்கர், கொட்டும் அருவியில் குதூகலமாய் குளியல் போட்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகள் தான் ஒரு கால கட்டத்திற்கு மேல் மார்க்கெட்டை இழந்து சின்னத்திரையில் தஞ்சம் புகுவார்கள் இது எல்லாம் பழைய கதை. தற்போது சின்னத்திரையில் புகழ் பெற்று விளங்கும் இளம் நடிகைகள் மற்றும் தொகுப்பாளர்களை கோலிவுட் இயக்குநர்கள் கொத்திக் கொண்டு வருகிறார்கள் என்பது தான் புதிய கதை.
பிரபல தனியார் தொலைக்காட்சியின் மூலம் செய்தி வாசிப்பாளராக அனைவராலும் அறியப்பட்டு பின் சீரியல் நடிகை, வெள்ளித்திரை கதாநாயகி என தன்னுடைய திறமையால், தன்னை மெருகேற்றி கொண்டவர் பிரியா பவானி சங்கர்.
கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் நடித்த பிரியா பவானி சங்கர் வெள்ளித்திரையில் கால் பதித்து ‘மேயாத மான்’ , மற்றும் 'கடைக்குட்டி சிங்கம்', 'மான்ஸ்டார், 'மாபியா' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசனின் இந்தியன் 2, ராதாமோகனின் பொம்மை, சிம்புவின் ‘பத்து தல', ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'ருத்ரன்' உட்பட 6 படங்கள் இவரது கை வசம் உள்ளது.
அம்மணி கை வசம் 6 படங்களுக்கு மிகாமல் உள்ளதால், முன்னணி நடிகைகள் பட்டியலுக்கு நகர்த்துள்ளார் பிரியா பவானி ஷங்கர்.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் பிரியா பவானி ஷங்கர், தற்போது பச்சை நிற டீ-ஷர்ட் அணிந்தபடி, அருவியில் குளித்தபடி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
தண்ணீரை பார்த்ததும்... குழந்தையாய் மாறி பிரியா பவானி ஷங்கர், அருவியில் குளித்து குதூகல ஆட்டம் போட்டுள்ளார்.
இவரது இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது. மேலும் இளம் ரசிகர்கள் பலர்... இந்த புகைப்படத்தை பார்த்து பார்த்து பெருமூச்சு விட்டு வருகிறார்கள்.