- Home
- Cinema
- 'அந்தகன்' படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தாரா நடிகர் பிரஷாந்த்! முதல் நாள் வசூல் விவரம் இதோ..!
'அந்தகன்' படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தாரா நடிகர் பிரஷாந்த்! முதல் நாள் வசூல் விவரம் இதோ..!
நடிகர் பிரசாந்த் ஆறு வருடங்களுக்குப் பின்னர் ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள 'அந்தகன்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல், தற்போது வெளியாகி உள்ளது.

90களில் தமிழ் சினிமாவில், விஜய் - அஜித்தை விட அதிக அளவு ரசிகர்கள் பட்டாளத்துடன் இருந்தவர் பிரஷாந்த். அஜித் - விஜய் போன்ற இளம் ஹீரோக்கள் அப்போது கோலிவுட் திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் அல்லாடி வந்த சூழலில், தன்னுடைய முதல் படமான 'வைகாசி பொறந்தாச்சு' திரைப்படத்தின் மூலம் முதல் வெற்றியை பதிவு செய்தார் பிரசாந்த்.
இப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் பிரஷாந்த் நடித்தது மட்டுமின்றி, தமிழில் வண்ண வண்ண பூக்கள், செம்பருத்தி, எங்க தம்பி, திருடா திருடா, கிழக்கே வரும் பாட்டு, போன்ற பல படங்களில் நடித்தார். குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான ஜீன்ஸ், ஜோடி, ஹலோ, குட் லக், அப்பு , பார்த்தேன் ரசித்தேன், பிரியாத வரம் வேண்டும், ஸ்டார், மஜ்னு, தமிழ், விரும்புகிறேன், வின்னர், போன்ற படங்கள் தற்போது வரை பல ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வரும் திரைப்படங்களாகும்.
நடிகர் பிரசாந்த் கடைசியாக 2018 ஆம் ஆண்டு வெளியான 'ஜானி' என்கிற படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நிலையில், அப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இதன் பின்னர் சில வருடங்கள் தன்னுடைய நடிப்புக்கு பிரேக் விட்டவர், தெலுங்கில் ராம்சரண் நடித்த 'வினைய விதைய ராமா' மற்றும் தற்போது விஜய்யுடன் சேர்ந்து 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
prashanth
அதே நேரம் தன்னுடைய தந்தை தியாகராஜன் இயக்கி, தயாரித்துள்ள, அந்தகன் படத்தில் சுமார் ஆறு வருடங்களுக்குப் பின் ஹீரோவாக நடித்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாக்கி இருந்த இந்த படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் பிரசாந்துடன் இணைந்த சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரகனி, யோகி பாபு, வனிதா விஜயகுமார், மனோபாலா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.