ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூலை ஒரே நாளில் வாரிசுருட்டிய பிரதீப்பின் டியூட்..!
கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை முந்தி சாதனை படைத்து இருக்கிறது.

Dude Beat Rajini Movie Lifetime Box Office Collection
தமிழின் இளம் நட்சத்திரங்களில் ஒருவரான பிரதீப் ரங்கநாதன் மற்றும் கேரளத்து பியூட்டி மமிதா பைஜு இணைந்து நடித்த 'டியூட்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது ஒரு பக்கா ஃபேமிலி என்டர்டெய்னர் படம் என்று படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் கூறுகின்றனர். 'லவ் டுடே' மற்றும் 'டிராகன்' படங்களைப் போலவே, இந்த முறையும் 'டியூட்' படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஒரு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்று திரையரங்குகளில் இருந்து வரும் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், மமிதாவின் நடிப்பும் மிகவும் சிறப்பாக இருப்பதாக அனைவரும் கூறுகின்றனர்.
சக்கைப்போடு போடும் டியூட்
காதல், சென்டிமென்ட் காட்சிகள் மற்றும் நகைச்சுவை என அனைத்திலும் இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். மமிதாவுக்கு அவரது சினிமா கெரியரில் கிடைத்த ஒரு சிறந்த கதாபாத்திரம் தான் இந்த குறளரசி கேரக்டர் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், சரத்குமார் நடித்த அதியமான் கதாபாத்திரத்திற்கும் திரையரங்குகளில் நல்ல கைதட்டல் கிடைக்கிறது. கீர்த்தீஸ்வரன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம், மூலம் தமிழுக்கு ஒரு நல்ல இயக்குனரை வழங்கியுள்ளது என்று முதல் காட்சி முடிந்ததும் சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன.
டியூட் படக்குழு
இசை உலகில் புதிய சென்சேஷனாக வலம் வரும் சாய் அப்யங்கர் இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்களை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் நேஹா ஷெட்டி, சத்யா, ஹிருது ஹாரூன், ரோகிணி, டிராவிட் செல்வம், கருடா ராம், ஐஸ்வர்யா ஷர்மா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பரத் விக்ரமன் படத்தொகுப்பு பணிகளை செய்துள்ளார்.
டியூட் வசூல் சாதனை
இந்த நிலையில், டியூட் படத்தின் முதல் நாள் வசூலை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.22 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லால் சலாம் திரைப்படத்தின் லைஃப் டைம் பாக்ஸ் ஆபிஸ் வசூலே 20 கோடி தான். ஆனால் பிரதீப் ரங்கநாதனின் டியூட் படம் ரிலீஸ் ஆன முதல் நாளே 22 கோடி வசூலித்துள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அண்மையில் வெளியான தனுஷின் இட்லி கடை படம் கூட முதல் நாளில் இம்புட்டு வசூலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.