பிரபாஸின் பிரம்மாண்ட படம் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு... உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்...!
பிரபாஸ் நடிப்பில் உருவாக உள்ள பிரம்மாண்ட திரைப்படமான ஆதிபுருஷ் பட ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபாஸ், பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார்.
அடுத்து மீண்டும் இந்தியாவை திரும்பி பார்க்க வைக்க திட்டம் போட்டுள்ள பிரபாஸ், தன்ஹாஜி பட இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ என்ற படத்தில் நடிக்கிறார்.
ராமயணத்தின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தில் பிரபாஸ் ராமராக நடிக்க உள்ளார்.
சைஃப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்த படத்தின் ஹீரோயின் அதாவது சீதை கேரக்டரில் முதலில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
3டி தொழில்நுட்பத்தில் இந்தி மற்றும் தெலுங்கில் உருவாக உள்ள இந்த திரைப்படம், தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது.
இந்த படத்திற்கு விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை மேற்கொள்ள அவதார் மற்றும் ஸ்டார் வார்ஸ் போன்ற பிரம்மாண்ட ஹாலிவுட் படங்களுக்கு பணியாற்றிய WETA நிறுவனத்தின் VFX தொழில்நுட்ப கலைஞர்களை களமிறக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் படத்தின் ஷூட்டிங்கை 2021ம் ஆண்டு தொடங்கி 2022ம் ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.