பான் இந்தியா நடிகருக்கு கன்னத்தில் பளார் விட்டாரா பூஜா ஹெக்டே? உண்மை பின்னணி என்ன?
நடிகை பூஜா ஹெக்டே, ஒரு ஸ்டார் ஹீரோ குறித்து தெரிவித்ததாக கூறப்படும் கருத்துகள் புயலைக் கிளப்பியுள்ளன. இதுகுறித்து பூஜா ஹெக்டேவின் குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். அதைப்பற்றி பார்க்கலாம்.

Pooja Hegde controversy
தமிழில் மிஸ்கின் இயக்கிய முகமூடி திரைப்படம் மூலம் அறிமுகமானார் பூஜா ஹெக்டே. இதையடுத்து தெலுங்கு சினிமா பக்கம் சென்ற அவர் அங்கு அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து டாப் ஹீரோயினாக உயர்ந்தார். சமீபத்தில் 'ரெட்ரோ', 'கூலி' போன்ற தமிழ் படங்களில் நடித்து கோலிவுட்டில் கம்பேக் கொடுத்தார். இதுதவிர இந்தியில் மூன்று படங்கள் நடித்துள்ளார். மேலும் தமிழில் விஜய்க்கு ஜோடியாக ஜனநாயகன் படத்தில் நடித்திருக்கிறார். இதோடு ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகும் காஞ்சனா 4 படத்திலும் நடித்து வருகிறார்.
பூஜா ஹெக்டே இப்படி சொன்னாரா?
இப்படி செம பிசியான ஹீரோயினாக வலம் வரும் பூஜா ஹெக்டே தற்போது இந்தியா முழுவதும் பேசுபொருளாகியுள்ளார். அவர் ஒரு பான்-இந்தியா ஹீரோவை அறைந்ததாகக் கூறப்படும் கருத்து சோசியல் மீடியாவில் புயலைக் கிளப்பியுள்ளது. அவர் ஒரு பேட்டியில், "என் அனுமதி இல்லாமல் என் கேரவனுக்குள் நுழைந்த ஒரு பான் இந்தியா ஹீரோ, தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும், அவரை நான் உடனடியாக அறைந்தேன். அதன்பிறகு அவர் என்னுடன் படம் செய்யவில்லை" என்று பூஜா கூறியதாக செய்தி பரவியது. பல ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டு இருந்தன.
பூஜா ஹெக்டே தரப்பு விளக்கம்
இதையடுத்து பூஜா ஹெக்டேவிடம் அத்துமீறிய அந்த பான் இந்தியா ஹீரோ யார் என்கிற விவாதம் எழத் தொடங்கியது. ஆனால், தற்போது லேட்டஸ்ட் தகவலின்படி இந்தச் செய்தியில் துளியும் உண்மையில்லை எனத் தெரிய வந்துள்ளது. பூஜா ஹெக்டேவின் குழுவினர் இந்தச் செய்தியை மறுத்துள்ளனர். பூஜா இதுபோன்ற கருத்துக்களை எந்த பேட்டியிலும் தெரிவிக்கவில்லை என்றும், இது போலியான செய்தி என்றும் கூறியுள்ளனர். பூஜாவின் மேலாளர் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி. ஒரு ஹீரோவை குறிவைத்து வேண்டுமென்றே இதைச் செய்வதாகக் கூறப்படுகிறது.
பூஜா ஹெக்டேவின் அடுத்த படம்
நடிகை பூஜா ஹெக்டே, ஜன நாயகன் படத்தின் ரிலீசுக்காக ஆவலோடு காத்திருக்கிறார். அப்படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். அது நடிகர் விஜய்யின் கடைசி படம் என்பதால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், அப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி இணையத்தில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இது நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் இரண்டாவது படமாகும், இதற்கு முன்னர் பீஸ்ட் படத்தில் இருவரும் ஜோடி போட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

