தளபதி விஜய்க்கு ஷாக் கொடுத்த பூஜா ஹெக்டே.. இணையத்தை அதிர வைத்த பாடல்
Pooja Hegde Thalapathy Kacheri Song Dance : ஜன நாயகன் படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலான தளபதி கச்சேரி பாடல் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் பூஜா ஹெக்டேயின் டான்ஸ் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

ஜன நாயகன்
இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே முன்னணி ரோலில் நடித்துள்ள படம் தான் ஜன நாயகன். வரும், 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி ஜன நாயகன் படம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்து பாபி தியோல், மமிதா பைஜூ, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, ரேவதி, நிழல்கள் ரவி, ஸ்ரீநாத் நரைன் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். விஜய்யின் கடைசி படமாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களிடையே இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தளபதி கச்சேரி - பூஜா ஹெக்டே
சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் கண்டிப்பாக ரூ.1000 கோடியை எட்டும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. இந்த நிலையில் தான் ஜன நாயகன் படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலான தளபதி கச்சேரி பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்தப் பாடலை அனிருத், அறிவு மற்றும் தளபதி விஜய் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் வரிகளை தெருக்குரல் அறிவு எழுதியிருக்கிறார். இப்பாடலுக்கு நடிகர் விஜய் அசத்தலாக நடனமாடி இருக்கிறார். சேகர் மாஸ்டர் தான் டான்ஸ் கொரியோகிராஃபராக பணியாற்றி இருக்கிறார். நேற்று மாலை வெளியான தளபதி கச்சேரி பாடல் இப்போது இன்ஸ்கிராம் பக்கத்தில் டிரெண்டாகி வருகிறது.
பீஸ்ட் ஹலமிதி ஹபிபோ
அதுமட்டுமின்றி விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டேயும் இந்த பாடலுக்காக இறங்கி குத்து டான்ஸ் போட்டியிருக்கிறார். இதில், அவரது போஷன் மட்டும் இன்ஸ்டாவில் ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த ஹலமிதி ஹபிபோ என்ற பாடல் உலகளவில் டிரெண்டானது. இந்த பாடலில் விஜய்யின் டான்ஸிற்கு ஏற்ப ஹெக்டேவும் நடனமாடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் கூலி மோனிகா
இதற்கு முன் ரஜினியின் கூலி படத்தில் இடம் பெற்றிருந்த மோனிகா என்ற பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனமாடி அசத்தியிருந்த நிலையில் அந்த புயல் இன்ஸ்டாவில் சூறாவளியாக அனைவரது இதயங்களையும் கொள்ளை கொண்ட நிலையில் இப்போது அடுத்ததாக தளபதி கச்சேரி பாடலும் இன்ஸ்டாவில் டிரெண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் பூஜா ஹெக்டேவின் நடனமே பேச்சாக உள்ளது. 'தளபதி கச்சேரி' பாடல் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 'மோனிகா' பாடலுக்குப் பிறகு மீண்டும் வைரலாகியுள்ளார்.
விஜய் பாடிய கடைசி பாடல்... தூள் கிளப்பும் ஜனநாயகன் பர்ஸ்ட் சிங்கிள் ‘தளபதி கச்சேரி’ சாங் இதோ