MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஏ.ஆர். ரகுமான் முதல்... மணிரத்னம் வரை 'பொன்னியின் செல்வன்' படத்திற்க்கு 4 தேசிய விருதுகள்!

ஏ.ஆர். ரகுமான் முதல்... மணிரத்னம் வரை 'பொன்னியின் செல்வன்' படத்திற்க்கு 4 தேசிய விருதுகள்!

கடந்த ஆகஸ்ட் மாதம் 70-ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இது பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

1 Min read
Author : manimegalai a
| Updated : Oct 08 2024, 07:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Poniyin Selvan

Poniyin Selvan

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று (அக்டோபர் 8 ஆம் தேதி), புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் சினிமாவில் சிறந்த படைப்பு மற்றும் நடிப்பு உள்ளிட்ட பல்வேறு பட்டியல்கள் கீழ் தேசிய விருது பெற்ற பிரபலங்களுக்கு, சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கப்பட்டு வருகிறது.

24
Poniyin Selvan

Poniyin Selvan

விருது விழா குறித்து வெளியான தகவலின் படி, இன்று மாலை 4:00 மணிக்கு தேசிய விருது விழா தொடங்கியது. இதில் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல் முருகன், குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டுக்குள் காதலியோடு சென்று கும்மாளம் போடும் அர்னவ்! வெளுத்து வாங்கிய மனைவி திவ்யா ஸ்ரீதர்!

34
Poniyin Selvan

Poniyin Selvan

இந்த 70-ஆவது தேசிய விருது விழா நிகழ்ச்சியில்.... சமீபத்தில் தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்றதாக அறிவிக்கப்பட்ட மிதுன் சக்ரவர்த்திக்கும் விருது வழங்கப்பட்டது. மேலும் தென்னிந்திய திரையுலகில், தேசிய விருது அறிவிக்கப்பட்ட அனைத்து பிரபலங்களும் விருது விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

44
Poniyin Selvan

Poniyin Selvan

குறிப்பாக தற்போது வழங்கப்பட்டு வரும்,  70வது தேசிய திரைப்பட விருதுகளில்... பொன்னியின் செல்வன் திரைப்படம் மட்டும், சுமார் 4 தேசிய விருதுகளை பெற்றது.அதன்படி சிறந்த இசைக்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு தேசிய விருது வழங்க பட்டது. இதை தொடர்ந்து சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை பொன்னியின் செல்வன் படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தட்டிச் சென்றார். இதுதவிர சிறந்த ஒலியமைப்புக்கான விருதும் பொன்னியின் செல்வன் பாகம் 1-ல் பணியாற்றிய ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே போல் சிறந்த தமிழ் படத்திற்கான விருதையும், பொன்னியின் செல்வன் முதல் பாகம் தான் வென்றுள்ளது. இதற்கான விருதுகளை, இயக்குனர் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட 4 பிரபலங்களும் பெற்றுக்கொண்டனர்.

தன்னை விட 20 வயது மூத்த ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்ய போகும் விக்ரம் மகள்!!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஏ. ஆர். ரகுமான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜனனியிடம் சண்டை போடும் சக்தி... குணசேகரன் பிளானில் திடீர் ட்விஸ்ட் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
டைவர்ஸ் கொடுக்குறேன் ஆனா ஒரு கண்டிஷன்... ரோகிணி விரித்த வலையில் சிக்கும் மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்
Recommended image3
ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்! ஆடிப்போன சந்திரகலா.. சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்! கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved