'பொன்னியின் செல்வன்' பார்ட் 1 சாதனையை நெருங்க முடியாமல் திணறும் பார்ட் 2! இதுவரை உலகளவில் முழு வசூல் விவரம்?
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி 15 நாட்களை எட்ட உள்ள நிலையில், இப்படம் உலக அளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது பற்றிய விபரம் தற்போது வெளியாகி உள்ளது.
புத்தகப் பிரியர்களால் காலம் கடந்து கொண்டாடப்படும் சிறந்த நாவல்கள் ஒன்று கல்கியின் கைவண்ணத்தால் உருவான 'பொன்னியின் செல்வன்' நாவல். இந்த நாவலை, படமாக்க எம்ஜிஆர், கமலஹாசன், போன்ற ஜாபவான்கள் முயற்சித்த நிலையில்... இந்த பிரம்மாண்ட படைப்பை அவர்களால் ஒரு சில காரணத்தால் படமாக்க முடியாமல் போனது. இதற்கு ஒரு முக்கிய காரணம் இப்படத்திற்கான பட்ஜெட் எனலாம்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகவே, 'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்க வேண்டும் என்கிற கனவுடன், பல்வேறு சவால்களையும், கஷ்டங்களையும், கடந்து படமாக்கி முடித்தார் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம்.
படையப்பா, ரோஜா, பொன்னியின் செல்வன் என தாறுமாறு ஹிட்டடித்த 10 படங்களை மிஸ் செய்த நடிகைகள்!
இந்த படத்தை லைக்கா நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்திருந்தது. ஏ ஆர் ரகுமான் இசையில், பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகமாக படமாக்கி முடித்தார் மணிரத்னம். இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது இரண்டாம் பாகம். 5 பாகங்கள் கொண்ட ஒரு பிரமாண்ட நாவலை எப்படி இயக்குனர் மணிரத்னம் நிறைவு செய்திருப்பார் என மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் திரையரங்கிற்கு படையெடுத்தனர் ரசிகர்கள்.
முதல் பாகத்துடன், இரண்டாம் பாகத்தை ஒப்பிட்டு பார்க்கையில், எதிர்பார்த்த அளவுக்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் மனதிற்கு நிறைவாக இல்லை என தெரிவித்து வருகிறார்கள். தொடர்ந்து இரண்டாம் பாகம் கலவையான விமர்சனங்களையே பெற்றுவரும் நிலையில், இதுவரை இப்படம் உலக அளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் 2, திரைப்படம் வெளியாகி 15 நாட்களை எட்ட உள்ள நிலையில், இதுவரை மொத்தமாக 330 கோடி தான் வசூலித்துள்ளதாம். இது முதல் பாகத்தை விட மிகவும் குறைவு என கூறப்படுகிறது. மேலும் நாளுக்கு நாள் இந்த படத்தின் வசூல் குறைத்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.