- Home
- Cinema
- Vaishnavi: சூட்டிங் ஸ்பாட்டில் விழுந்து வாரிய விஜய் டிவி சீரியல் நடிகையின் நிலை! வைரலாகும் போட்டோ!
Vaishnavi: சூட்டிங் ஸ்பாட்டில் விழுந்து வாரிய விஜய் டிவி சீரியல் நடிகையின் நிலை! வைரலாகும் போட்டோ!
பொன்னி சீரியல் நடிகை, வைஷ்ணவிக்கு சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்டு அவர் நடக்க முடியாமல் வால்கிங் ஸ்ட்ரிக் உதவியுடன் தாங்கி தாங்கி நடந்து வரும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று 'பொன்னி' . இந்த சீரியலில் ஹீரோயினாக வைஷ்ணவி நடித்து வருகிறார். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் தொடரான, 'சிறகடிக்க ஆசை' சீரியல் ஹீரோ வெற்றி வசந்த்தை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் சீரியலில் கவனம் செலுத்தும் வைஷ்ணவி
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து, சீரியலில் கவனம் செலுத்தி வரும் வைஷ்னவி, வெற்றி வசத்துடன் இணைந்து சீரியலில் நடிக்கவில்லை என்றாலும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறி, திருமணத்திலும் முடிந்தது.
பொன்னி சீரியலில் திடீர் என மாற்றப்பட்ட நடிகர்! இனி அவருக்கு பதில் இவர்!
சீரியலை விட்டு விலகி விட்டாரா?
இந்த நிலையில் தான் பொன்னி சீரியலில் வைஷ்ணவி தொடர்பான காட்சிகள் சில நாட்களாக இடம்பெறவில்லை. இதற்கு அவர் சீரியலிலிருந்து விட்டாரா? என்று கூட ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.
பொன்னி சீரியல் நடிகை வைஷ்ணவியின் நிலை:
கடந்த 2 நாட்களாக தான் மீண்டும் இவரின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் வைஷ்ணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சூட்டிங்ஸ்டாட்டில் தனக்கு காலில் மட்டுமின்றி தோள்பட்டையிலும் அடிப்பட்டது என்றும் எலும்பிலும் அடிபட்டிருக்கிறது என கூறியுள்ளார்.
ஜாம் ஜாம்னு நடைபெற்ற சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோ வெற்றி வசந்த் திருமணம்!
ஆக்ஷன் காட்சியில் நடிக்காமலேயே பலத்த அடி
நடக்க முடியாமல் வாக்கிங் ஸ்டிக் வைத்து நடந்து வரும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். பொதுவாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்தால் அடிபடும்.... சீரியலில் அப்படி எந்த ஒரு காட்சியிலும் நடிக்காமல் உங்களுக்கு எப்படி அடிபட்டது என? நெட்டிசங்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இன்னும் சிலர் உங்களின் உடல்நிலையில் கவனித்து கொள்ளுங்கள் என அக்கறையோடு கமெண்ட் போட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.