'மாஸ்டர்' வெற்றிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த செயல்..! அனிருத் வெளியிட்ட புகைப்படம்..!
First Published Jan 10, 2021, 11:04 AM IST
மாஸ்டர் படத்தின் வெற்றிக்காக, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிரபல கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படத்தை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.

லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி வெளியாக உள்ளது.

கொரோனா லாக்டவுனுக்கு பிறகு தியேட்டரில் வெளியாக உள்ள மாஸ் ஹீரோ படம் என்பதால் மக்கள் கூட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் அதிக அளவிலான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 700, கர்நாடகாவில் 100, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 400, வட இந்தியாவில் 1000, வெளிநாட்டில் 1000 என மொத்தம் 3500 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?