ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு... புடவையை பறக்க விட்டு... பொங்கல் ஸ்பெஷல் போஸ் கொடுத்த நீலிமா ராணி..!
ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு... புடவையை பறக்க விட்டு... பொங்கல் ஸ்பெஷல் போஸ் கொடுத்த நீலிமா ராணி..!
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் நீலிமா ராணி, தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
கமலின் தேவர் மகன் படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா ராணி, அதன் பின்னர் மொழி, தம், ராஜாதி ராஜா, நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் நீலிமா ராணி இதுவரை 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். குறிப்பாக வில்லி வேடத்தில் பின்னிபெடலெடுத்து வருகிறார்.
கோலங்கள், மெட்டி ஒலி சீரியல்கள் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நீலிமா. அனைவரும் அறிந்த பிரபலமான சின்னத்திரை முகமாக வலம் வருகிறார்.
சீரியல், சினிமா, தொகுப்பாளினி, தயாரிப்பாளர் என பல அடையாளங்களைக் கொண்டுள்ள நடிகை நீலிமா ராணி.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வந்த அரண்மனைகிளி சீரியலில் துர்கா என்ற வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டிய நீலிமாவை யாரும் மறந்திருக்க முடியாது.
அப்போது பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, சோசியல் மீடியாவே செம்ம ஹாட் ஆகும் அளவிற்கு, மஞ்சள் நிற சேலையில் தூள் கிளப்பும் கிளுகிளுப்பு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து நீலிமா நடத்தியுள்ள இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாவதோடு, லைக்குகளையும் குவித்து வருகிறது.
குழந்தைக்கு தாயான பிறகும் கும்முனு இருக்கும், நீலிமா ராணியின் போட்டோஸ் படு ஹாட் என ரசிகர்கள் சிலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கிய பின் இவரது அட்ராசிட்டி கொஞ்சம் ஓவராக தான் போய் கொண்டிருக்கிறது?