தொலைந்தது 60 பவுன்... கிடைத்தது 100 பவுன்- நகை திருட்டு வழக்கில் திருப்பம்.. ரஜினி மகளையும் விசாரிக்க திட்டம்?
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 60 சவரன் நகை தான் திருடுபோனதாக புகார் அளித்திருந்த நிலையில், மொத்தமாக 100 சவரன் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் இருந்து 60 சவரன் தங்க, வைர நகைகள் காணாமல் போனதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், ஐஸ்வர்யாவிடம் வேலை பார்த்து வந்த ஈஸ்வரி என்கிற பெண் தான் இந்த நகைகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த கடந்த 4 ஆண்டுகளாக லாக்கரை திறந்து பார்க்காமல் இருந்து வந்ததால், அதனை பயன்படுத்தி கொஞ்டம் கொஞ்சமாக நகைகளை அபேஸ் செய்து வந்துள்ளார் ஈஸ்வரி.
ஐஸ்வர்யாவின் வீட்டில் இருந்து திருடிய நகைகளை வைத்து ஈஸ்வரி, சென்னையில் ரூ.1 கோடிக்கு சொந்தமாக வீடு வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. மொத்தமாக பணத்தை கொடுத்து வீடுவாங்கினால் மாட்டிக்கொள்வோம் என திட்டமிட்டு, வங்கியில் கடன் வாங்கி வீடு வாங்கி, அந்த கடனை இரண்டே ஆண்டுகளில் அடைத்திருக்கிறார் ஈஸ்வரி. திருடப்பட்ட நகைகளையும் போலீசார் மீட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்... உள்ளம் உருகுதய்யா... தமிழ் திரையுலகில் இசை ராஜாங்கம் நடத்திய டி.எம்.செளந்தரராஜனின் 100-வது பிறந்தநாள் இன்று
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 60 சவரன் நகை தான் திருடுபோனதாக புகார் அளித்திருந்த நிலையில், மொத்தமாக 100 சவரன் நகைகளை மீட்டுள்ளது போலீஸ். புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதைவிட அதிக நகைகள் கைப்பற்றப்பட்டு உள்ளதால், ஐஸ்வர்யா ரஜினிகாந்திடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். அவர் வாங்கிய நகைகளுக்கான ரசீதுகளை வைத்து நகைகளை அவர்கள் சரிபார்க்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மறுபுறம் கூடுதலாக கைப்பற்றப்பட்ட நகைகளை ஈஸ்வரி ரஜினி மற்றும் தனுஷ் வீடுகளில் இருந்து கொள்ளையடித்தாரா என்கிற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக ரஜினிவீட்டில் வேலை பார்த்து வந்த போது தான் ஐஸ்வர்யா உடன் நெருங்கி பழகி உள்ளார் ஈஸ்வரி. அந்த பழக்கத்தினால் அவரை நம்பி தன் வீட்டில் அனைத்து அறைகளுக்கும் சென்று வரும் அளவுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா. அதைப் பயன்படுத்தி தான் இந்த திருட்டு செயல்களில் ஈஸ்வரி ஈடுபட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... தந்தையின் சடலம் பக்கத்தில் சோகத்துடன் நின்று... வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு அஜித்!