MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிச்சைக்காரன் 2 முதல் மாடர்ன் லவ் சென்னை வரை... இந்தவார தியேட்டர் & ஓடிடி ரிலீஸ் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ

பிச்சைக்காரன் 2 முதல் மாடர்ன் லவ் சென்னை வரை... இந்தவார தியேட்டர் & ஓடிடி ரிலீஸ் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் வருகிற மே 19-ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : May 17 2023, 01:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தியேட்டரில் ரிலீசாகும் படங்கள்

பிச்சைக்காரன் 2

விஜய் ஆண்டனி தயாரித்து, இயக்கி, இசையமைத்து, நடித்துள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படம் வருகிற மே 19-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காவ்யா தப்பார் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, தேவ் கில், ஜான் விஜய், மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

யாதும் ஊரே யாவரும் கேளிர்

வெங்கட கிருஷ்ணா ரோக்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் கனிகா, விவேக், மகிழ் திருமேனி, மோகன் ராஜா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் வருகிற மே 19-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... கேன்ஸ் பட விழாவில்... கெத்தாக வேஷ்டி சட்டை அணிந்து வந்து மாஸ் எண்ட்ரி கொடுத்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

34

ஓடிடியில் ரிலீசாகும் படங்கள்

தமிழில் மகத், சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி சரத்குமார், ஆரவ் ஆகியோர் நடித்துள்ள மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன் திரைப்படம் வருகிற மே 19-ந் தேதி நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. தயாள் பத்மநாபன் இப்படத்தை இயக்கி உள்ளார். கிரைம் திரில்லர் படமாக இது தயாராகி உள்ளது. இதுதவிர விமலின் தெய்வமச்சான் திரைப்படம் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்திலும், மஞ்சு வாரியர் நடித்த செண்டிமீட்டர் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடியிலும் ரிலீஸ் ஆக உள்ளது.

44

ஓடிடியில் ரிலீஸாகும் வெப் தொடர்

பாரதிராஜா, தியாகராஜன் குமாரராஜா, ராஜுமுருகன் உள்பட 6 இயக்குனர் இணைந்து இயக்கி உள்ள மாடர்ன் லவ் சென்னை என்கிற ஆந்தாலஜி வெப் தொடர் வருகிற மே 18-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த வெப் தொடருக்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ், ஷான் ரோல்டன் ஆகியோர் இசையமைத்து உள்ளனர். காதலை மையமாக வைத்து இந்த வெப் தொடர் தயாராகி உள்ளது.

இதையும் படியுங்கள்... முதன்முறையாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வைகைப்புயல் வடிவேலு பாடிய மாமன்னன் பாடல் - ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kavya Maran Wedding: காவ்யா மாறன் கல்யாணம்! ரகசியம் உடைத்த நடிகர்! அப்ப மாப்பிள்ளை அவர் தானா?
Recommended image2
Baahubali Facts: முதல் நாளே ரூ.70 கோடி நஷ்டம்.. ராஜமௌலி கதறி அழுத நாள்! பாகுபலி சந்தித்த பெரிய நெருக்கடி
Recommended image3
Net Worth: முதல்வர் விஜய்யை விட அதிக சொத்துக்கள் வைத்திருக்கும் ஷாரூக் கான்.. எவ்வளவு தெரியுமா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved