- Home
- Cinema
- பாக்ஸ் ஆபிஸில் பஞ்சரான பவன் கல்யாணின் ஓஜி... ஒரே நாளில் மளமளவென சரிந்த வசூல் - அதுக்குன்னு இவ்ளோ கம்மியா?
பாக்ஸ் ஆபிஸில் பஞ்சரான பவன் கல்யாணின் ஓஜி... ஒரே நாளில் மளமளவென சரிந்த வசூல் - அதுக்குன்னு இவ்ளோ கம்மியா?
சுஜீத் இயக்கத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ஓஜி திரைப்படம் முதல் நாளைக் காட்டிலும் இரண்டாம் நாள் 127 கோடி கம்மியாக வசூலித்து உள்ளது.

OG Movie Day 2 Box Office
பிரபாஸ் நடித்த 'சாஹோ' மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சுஜீத். பிரபாஸின் பான்-இந்திய படமாக வெளியான 'சாஹோ' எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தற்போது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சுஜீத் ஒரு புதிய படத்துடன் வந்துள்ளார். பவன் கல்யாண் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்திற்கு 'ஓஜி' (தே கால் ஹிம் ஓஜி) என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் கடந்த வியாழக்கிழமை உலகமெங்கும் வெளியானது. ரிலீஸ் ஆன முதல் நாளில் இப்படம் 154 கோடி ரூபாய் வசூலித்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், அப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
ஓஜி படத்தின் இரண்டாம் நாள் வசூல்
அதன்படி ஓஜி திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் கடும் சரிவை சந்தித்து உள்ளது. நேற்று வேலை நாள் என்பதால் இப்படத்திற்கு பெரியளவில் கூட்டமில்லை. இதனால் இப்படம் நேற்று வெறும் 27 கோடி மட்டுமே வசூலித்து இருக்கிறது. முதல் நாள் வசூலோடு ஒப்பிடுகையில் அதைவிட 127 கோடி கம்மியாக வசூலித்து இருக்கிறது. அதில் இந்தியாவில் மட்டும் ரூ.19 கோடி வசூலித்துள்ளது. இப்படம். இதன்மூலம் ரிலீஸ் ஆன இரண்டு நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது ஓஜி திரைப்படம்.
பவன் கல்யாணின் ஓஜி
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பவன் கல்யாணின் பிறந்தநாளில் டீசர் வெளியிட்டு அறிவிக்கப்பட்ட படம் இது. ஆனால், பின்னர் பவன் கல்யாண் அரசியலில் இறங்கி ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சரானதால் படம் தாமதமானது. இந்நிலையில், ஓஜி தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது. ஓஜி படத்தில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி வில்லனாக நடிக்க, பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஓஜி படக்குழு
ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், 'ஓஜாஸ் கம்பீரா' என்ற 'ஓஜி'யாக பவன் கல்யாண், நாயகி பிரியங்கா, வில்லன் இம்ரான் ஹாஷ்மி ஆகியோருடன் பிரகாஷ் ராஜ், அர்ஜுன் தாஸ், ஸ்ரியா ரெட்டி, ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் நடித்துள்ளனர். டி.வி.வி. தனய்யா இப்படத்தை டி.வி.வி என்டர்டெயின்மென்ட் பேனரில் தயாரிக்கிறார். ஹரீஷ் பாய் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும், அஸ்வின் மணி நிர்வாகத் தயாரிப்பாளராகவும் உள்ளனர்.
பவன் கல்யாணின் இதற்கு முந்தைய படமான 'ஹரி ஹர வீர மல்லு' எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை. 'ஹரி ஹர வீர மல்லு' உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் சுமார் 116.83 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.