பராசக்தி முதல் மலைக்கள்ளன் வரை கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவான டாப் 5 சிறந்த படங்கள்
கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவர் எழுதிய சிறந்த 5 ஸ்கிரிப்ட்டுகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Karunanidhi Birthday
கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை திமுக-வினர் இன்று கொண்டாடி வருகின்றனர். திமுக தலைவராகவும், தமிழக முதல்வராகவும் பதவி வகித்துள்ள கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு காலமானார். அவரின் 102வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. கருணாநிதி அரசியலில் மட்டுமல்லாமல் சினிமாவிலும் தன்னுடைய முத்திரையை பதித்திருக்கிறார். அவரின் கைவண்ணத்தில் உருவான படங்கள் காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகின்றன. இவர் எழுதிய டயலாக்குகளும் செம ஹிட் அடித்தன. அப்படி கருணாநிதி எழுதிய டாப் 5 சிறந்த ஸ்கிரிப்ட்டுகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பராசக்தி
பராசக்தி என்று சொன்னாலே அதில் சிவாஜி பேசிய வசனங்கள் தான் நியாபகத்துக்கு வரும், நாடி நரம்பு புடைக்க அவர் நடிப்பால் மெருகேற்றிய அந்த வசனங்களை கருணாநிதி தான் எழுதினார். இப்படம் மூலம் தான் சிவாஜி நாயகனாக அறிமுகமானார். கடந்த 1952-ம் ஆண்டு ரிலீஸ் ஆன பராசக்தி திரைப்படம் அதிரி புதிரியான வெற்றியை ருசித்தது. படத்தின் டயலாக்குகள் முதல் நடிப்பு வரை அனைத்தும் பாராட்டை பெற்றன. தமிழ் சினிமாவின் ஒரு கல்ட் கிளாசிக் படமாக பராசக்தி உள்ளது.
மனோகரா
பராசக்தி படத்தின் வெற்றிக்கு பின்னர் கருணாநிதி - சிவாஜி கணேசன் கூட்டணியில் உருவான படம் மனோகரா. எல்.வி பிரசாத் இயக்கிய இப்படத்திற்கு கருணாநிதி தான் திரைக்கதை மற்றும் வசனம் எழுதினார். தாய்க்காக எதையும் செய்யும் மகனாக சிவாஜி நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட சிறந்த வரலாற்று படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்திற்காக கருணாநிதி எழுதிய யதார்த்தமான டயலாக்குகளால் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
மந்திரக்குமாரி
1960களில் கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் சக்சஸ்புல் கூட்டணியாக வலம் வந்தனர். இவர்கள் காம்போவில் ஏராளமான படங்கள் வந்தன. அதில் ஒன்று தான் மந்திரக்குமாரி. குண்டலகேசியில் நடந்த ஒரு நிகழ்வை மையமாக வைத்து தான் இப்படம் உருவாக்கப்பட்டது. இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சகுந்தலா நடித்திருந்தார். 1950ம் ஆண்டு மந்திரக்குமாரி ரிலீஸ் ஆனது. அந்த காலகட்டத்திலேயே பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றியை ருசித்தது இப்படம். பல நகரங்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இப்படத்திற்கு கருணாநிதி எழுதிய வசனங்களும் பாராட்டை பெற்றன.
மலைக்கள்ளன்
மாஸ்க் ஆஃப் சாரோவை மையமாக வைத்து உருவான படம் தான் மலைக்கள்ளன். இப்படத்தில் எம்.ஜி.ஆர் நாயகனாக நடித்திருந்தார். இப்படத்திற்கு சுப்பையா நாயுடுவின் இசையும், அவர் கம்போஸ் செய்த பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. 1954ல் ரிலீஸ் ஆன மலைக்கள்ளன் 140 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. எம்.ஜி.ஆரை மிகப்பெரிய ஸ்டார் ஆக உயர்த்திய படங்களில் மலைக்கள்ளனும் ஒன்று. ஜனாதிபதி கையால் விருது வென்ற முதல் தமிழ் படமும் இதுதான். இப்படத்திற்கும் கருணாநிதி தான் ஸ்கிரிப்ட் எழுதி இருந்தார்.
பூம்புகார்
சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து கலைஞர் கருணாநிதி எழுதிய திரைப்படம் தான் பூம்புகார். கோவலன் மற்றும் கண்ணகியை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தில் நிதிப்பிரச்சனையால் பாண்டிய மன்னர் ஆழும் மதுரைக்கு செல்லும் கோவலனுக்கு என்ன ஆனது என்பதே படத்தின் கதை. ராஜேந்திரன் மற்றும் விஜயகுமாரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் பாபுலர் ஆனதற்கு கருணாநிதியின் திரைக்கதை மற்றும் டயலாக்குகள் தான் காரணம்.