- Home
- Cinema
- Parasakthi Day 2 Box Office : இரண்டாம் நாளே டிராப் ஆன வசூல்... சன்டே பாக்ஸ் ஆபிஸில் பஞ்சரான பராசக்தி..!
Parasakthi Day 2 Box Office : இரண்டாம் நாளே டிராப் ஆன வசூல்... சன்டே பாக்ஸ் ஆபிஸில் பஞ்சரான பராசக்தி..!
சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்துள்ள பராசக்தி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் இரண்டாம் நாளே சரிவை சந்தித்து உள்ளது. அதன் பின்னணியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Parasakthi Day 2 Box Office
சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜனவரி 9-ந் தேதி திரைக்கு வந்த படம் பராசக்தி. இந்தி எதிர்ப்பு போராட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை சுதா கொங்கரா இயக்கி இருந்தார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். இது அவரின் 100வது படமாகும். இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சுமார் 140 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்தது. இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ரவி கே சந்திரன் மேற்கொண்டு இருந்தார். இப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
விமர்சிக்கப்படும் பராசக்தி
பராசக்தி திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. இப்படத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்பான காட்சிகளை அதிகமாக காட்டாமல் சிவகார்த்திகேயனுக்கும் ஸ்ரீலீலாவுக்கும் இடையேயான காதல் காட்சிகளை அதிகளவில் வைத்து பொறுமையை சோதித்துவிட்டார்கள் என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இப்படத்தில் நெகடிவ் ஷேடில் நடித்துள்ள ரவி மோகன் தான் படத்திற்கு மைனஸ் ஆக அமைந்திருக்கிறார். அவரின் கதாபாத்திர வடிவமைப்பில் கோட்டைவிட்டிருக்கிறார் சுதா கொங்கரா என்று தான் சொல்ல வேண்டும்.
சொதப்பல் வில்லன்
ரவி மோகன் இந்தி திணிப்பு ஆதரவாக இருக்கிறார். அவர் ஒரு தமிழராக இருந்து கொண்டு இந்தி திணிப்பை எதற்காக ஆதரிக்கிறார் என்பதை ஆழமாக சொல்லி இருந்தால் அவரது கேரக்டர் சற்று ரசிக்கும்படி இருந்திருக்கும். எதற்கென்றே தெரியாமல் அவர் எதிர்ப்பது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. அந்த கேரக்டரில் வேறுயாராவது இந்தி நடிகரை நடிக்க வைத்திருந்தால் கச்சிதமாக இருந்திருக்கும். ரவி மோகன் அதற்கு தவரான சாய்ஸ் என்பது திரையிலேயே தெரிகிறது. இப்படி படத்தின் கதையை சொதப்பலாக்கியதில் சென்சாரின் பங்கும் உண்டு. நிறைய இடங்களில் கத்திரி போட்டுள்ளது ஒரு பின்னடைவாக உள்ளது.
வசூல் நிலவரம் என்ன?
இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால் வசூலில் பயங்கர அடிவாங்கி உள்ளது. முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.10.16 கோடி வசூலித்திருந்த இப்படம், நேற்று மேலும் சரிவை சந்தித்து உள்ளது. இப்படம் நேற்று தமிழ்நாட்டில் வெறும் ரூ.8.27 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையே வசூல் சரிவை சந்தித்து உள்ளதால், ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். போகிற போக்கை பார்த்தால் இப்படம் 100 கோடி வசூல் எட்டுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. இப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் 35 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இன்று திங்கட்கிழமைக்கான புக்கிங்கும் மந்தமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

