விஜே சித்ராவை கடித்து குதறிய ஹேமந்த்... அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதாக நண்பர் ‘பகீர்’ வாக்குமூலம்...!
சமீபத்தில் ஹேமந்துடன் பேசிய ஆடியோவை வெளியிட்ட அவருடைய நண்பர் செய்யது ரோகித் பகீர் குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து வந்த விஜே சித்ரா டிசம்பர் 9ம் தேதி சென்னை நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் ஹேமந்தை போலீசார் கைது செய்தனர். அந்த வழக்கு தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், ஹேமந்த் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து நேற்று நசரத்பேட்டை போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் சித்ராவின் கணவர் ஹேமந்தின் சந்தேகமே அவருடைய தற்கொலைக்கு காரணம் என திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீபத்தில் ஹேமந்துடன் பேசிய ஆடியோவை வெளியிட்ட அவருடைய நண்பர் செய்யது ரோகித் பகீர் குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிப்பது தொடர்பாக பலமுறை சித்ராவுடன் சண்டையிட்டு வந்த ஹேமந்த், அவரை ரத்தம் வர அடித்து உதைப்பது மட்டுமின்றி, ஒரு விலங்கைப் போல அவரை கடித்தும், கீறியும் வைப்பார் எனக்கூறி அதிர்ச்சி கிளப்பியுள்ளார்.
தன்னுடைய மனைவி ஒரு மருத்துவர் என்பதால் சித்ராவின் கன்னித்தன்மையை கண்டறிய ஆலோசனை கேட்டதாகவும், தன்னுடைய வீட்டிற்கு கீழ் இருக்கும் கிளினிக் மருத்துவரிடமும் virginity Test எடுப்பது குறித்து கேட்டதாகவும் பகீர் கிளப்பியுள்ளார்.
சித்ராவுக்கு பல கொடுமைகளை செய்த ஹேமந்தை ஜாமீனில் வெளியே விடக்கூடாது என்று கொந்தளிக்கும் ரோஹித், சித்ரா மீது ஹேமந்தின் தந்தை அபாண்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததால் தான் தற்போது உண்மைகளை ஊரறிய முன்வைப்பதாகவும் கூறியுள்ளார்.