#Unseen “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நடிகருடன் சித்ரா நடத்திய அசத்தல் போட்டோ ஷூட்... கண்கலங்கும் ரசிகர்கள்...!
First Published Dec 11, 2020, 7:01 PM IST
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் ரங்கநாதனுடன் விஜே சித்ரா நடத்திய போட்டோ ஷூட் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலேயே அதிக ரசிகர்களை கவர்ந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். அண்ணன் - தம்பி சென்டிமெண்ட் உடன் வெளியாகும் இந்த தொடருக்கு ரசிகர்கள் பட்டாளம் எக்கச்சக்கம்.

இந்த சீரியலில் 10க்கும் மேற்பட்ட முக்கியமான கதாபாத்திரங்கள் நடித்திருந்தாலும் அனைவருக்கும் முதலில் பிடித்தது யார்? என்று கேள்வி கேட்டால், எல்லாரும் சொல்லும் ஒரே பெயர் விஜே சித்ராவாக தான் இருக்கும்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?